ப்ரெண்ட்ஸ் சீரிஸ் புகழ் மேத்யூ பெரி சனிக்கிழமை அன்று தன் லாஸ் ஏஞ்சலத்தில் உள்ள வீட்டில் இறந்த நிலையில் முதலுதவியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். அவரின் உயிரை மீட்க முதலுதவியாளர்கள் செய்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் தனது 54 வயதில் காலமானார் மேத்யூ பெரி.
பெரியின் மரணத்தில் சந்தேகிக்கும் படியாக எதுவும் இல்லை, சம்பவ இடத்தில் போதை பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேத்யூ பெரியின் எதிர்பாராத இந்த இறப்பு குறித்து பிரண்ட்ஸ் சீரிஸை தயாரித்த வார்னர் பிரோஸ் நிறுவனம் உட்பட ஹாலிவுட்டில் நட்சத்திரங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேத்யூ பெரி ஹாலிவுட்டில் பல படங்களிலும் வெப் சீரிஸிலும் இடம் பெற்றிருந்த நடிகர். ஆனால், அவரை உலகெங்கிலும் ஒரு பரிச்சயமான முகமாக மாற்றியது 90களில் வெளியான 'சிட்-காம் பிரண்ட்ஸ்' - இல் அவர் நடித்த 'சாண்டலர் பிங்' கதாபாத்திரம் தான். அவருடைய படங்களும், ஆன் ஸ்கிரீன் கதாபாத்திரங்களும் எப்போதும் நகைச்சுவையும், மென்மையான கதாபாத்திரமாகவும் இருந்தாலும், பெரியின் வாழ்க்கை அத்தனை மென்மையானதாக இல்லை. ப்ரெண்ட்ஸ் சீரிஸ் நடித்துக் கொண்டிருக்கும் போது, அதாவது தன் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில், பெரி போதை பொருளுக்கு அதிலும் குறிப்பாக வலி நிவாரணிகளுக்கு அடிமையானார். இதனால் ரொமாண்டிக்காக எடை கூடுவதும் குறைவதுமாக இருந்தார். மேத்யூ திருமணம் செய்து கொள்ளவில்லை.
போதை பழக்கத்திற்கு அடிமையானது பற்றியும் அதிலிருந்து மீண்டது பற்றியும் சென்ற ஆண்டு வெளியான தன் சுயசரிதை "ப்ரெண்ட்ஸ், லவ்வர்ஸ், அண்ட் தி பிக் டெர்ரிபல் திங்" -ல் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசியிருப்பார். தன் வாழ்க்கையில் இருந்த இந்த போராட்டமான காலத்தைப் பற்றி இந்த புத்தகத்திற்காக நடந்த நேர்காணல்கள் பலவற்றில் மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் போதைப் பொருளுக்கு அடிமையானதால் தான் சந்தித்த பிரச்சனையின் தீவிரத்தைப் பற்றியும் பேசியிருந்தார் மேத்யூ பெரி.
இந்நிலையில் சமீபத்தில் காஸ்ட்ரோஇன்ட்ஸ்டினியில் பர்பரேஷனால் (gastro intestinal perforation) மருத்துவமனையில் மூன்று மாதங்கள் இருந்த பெரி. அதிலிருந்து சர்ஜரிக்கு பிறகு மீண்டிருந்தார். இந்நிலையில் பெரியின் இந்த எதிர்பாராத இறப்பு ப்ரெண்ட்ஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
from விகடன்
Comments