நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்து வெற்றி படமாக அமைந்தது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதனிடையே நேற்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், சிவகார்த்திகேயனும் இணையவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருந்தது.

ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்த சிவகார்த்திகேயன் “23 வது படத்தில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டு அடுத்த படம் தொடர்பான அறிவிப்பைத் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸும் பதில் ட்வீட்டை பகிர்ந்து அதனை உறுதி செய்திருந்தார். சமூக வலைதளங்கள் முழுவதும் நேற்று இந்த செய்தி வைரலானது.
இந்நிலையில் நடிகர் சதீஷ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் குறித்து சிவகார்த்திகேயன் 2012-ல் பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றை தற்போது பகிர்ந்திருக்கிறார். சிவகாத்திகேயன் அந்த ட்வீட்டில் , “ இன்றைய தேதிக்கு கையில 'துப்பாக்கி' வச்சிருக்கவன விட 'துப்பாக்கி' படத்தின் டிக்கெட் வச்சிருக்கவந்தான் பெரிய ஆளு… எனக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது”என்று பதிவிட்டிருக்கிறார்.
Idhu dhan #Thuppaki padam #FDFS pic @actorvijay @Siva_Kartikeyan @ARMurugadoss ❤️ https://t.co/fPRwRwxeVz pic.twitter.com/6kgbMHP8wL
— Sathish (@actorsathish) September 26, 2023
அதனை சதீஷ் ரீ ட்வீட் செய்து இதுதான் துப்பாக்கி படத்தின் FDFS பிக் என்று புகைப்படத்தை பகிர்ந்து விஜய், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் என மூவரையும் டேக் செய்திருக்கிறார். தற்போது இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
from விகடன்
Comments