ரக்ஷா பந்தன்: உடன்பிறப்புகளுக்கு திரை பிரபலங்களின் வாழ்த்துகள்! | Visual Story

ரக்ஷா பந்தன் வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பல பாசமலர்களின் புன்னகைகள் பகிரப்பட்டு வருகின்றன.

பல திரைத்துறை பிரபலங்களும் தங்கள் உடன்பிறப்புகளின் புகைப்படங்கள் பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர். அவர்களில் சிலரின் புகைப்படத் தொகுப்பு இங்கே...

கியாரா அத்வானி தன் தம்பி மிஷால் அத்வானிக்கு, `என் அன்பு சகோதரனே, இந்த நாளில் உன்னைக் கூடுதலாக மிஸ் செய்கிறேன்’ என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவது தனது சிறு வயது புகைப்படத்தைப் பதிவிட்டு, மூன்று தம்பிகளுக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா, தன் சகோதரி ஷிமான் மந்தனாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, `உனக்கு மிகப்பெரிய ஹக் அனுப்புகிறேன். அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் தன் இரண்டு சகோதரிகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``என் அன்பான பிரியா மற்றும் அஞ்சு, இந்த ரக்ஷா பந்தனில், உங்கள் மீது நான் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் உங்கள் இருவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

அக்ஷய் குமார் தன் சகோதரி அல்கா பாட்டியாவிற்கு, ’நீ என்னுடன் இருந்தால், வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும். என் சகோதரி, முதல் நாளிலிருந்தே என் வலிமையின் தூண்’ என மனம் உருகி உள்ளார்.

ஹூமா குரேஷி தன் சகோதரர் சாகிப் சலீமின் விளையாட்டுத்தனமான புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஜெனிலியா, நிகு பிகு என செல்லமாக அழைக்கும் தன் சகோதரர் நைஜல் டிசோசாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்!



from விகடன்

Comments