ரக்ஷா பந்தன்: ஓட முடியாது ஒளிய முடியாது, மெஹந்தியில் QR Code: அண்ணன்களுக்கு செக் வைக்கும் தங்கைகள்!

`எங்க அண்ணன், எங்க அண்ணன் அன்பை அள்ளி தெளிக்குறதில் மன்னன்’ என ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள் ஜோராக நடைபெற்று வருகின்றன. ரக்ஷா பந்தனின் முக்கிய அங்கமே, அண்ணன்கள் கையில் ராக்கிகளை கட்டி, ஒரு பெரிய தொகையை வாங்குவதுதான். 

ரக்‌ஷா பந்தன்

இது தான் நல்ல சந்தர்ப்பம் என அண்ணன்களைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தை வாங்கும் தங்கைகள் ஒருபுறம், தங்கைகளின் கண்களில் சிக்காமல் தப்பிச் செல்லும் அண்ணன்கள் மறுபுறம் என ஒரே ரகளையாக இருக்கும்.

இந்நிலையில் ரக்ஷா பந்தனில் ஒரு வீடியோ இன்ஸ்டாவில் டிரெண்டாகி வருகிறது. `இது டிஜிட்டல் மெஹந்தி ராக்கி' எனக் குறிப்பிடப்பட்ட அந்த வீடியோவில், பெண்ணின் கையில் மெஹந்தி டிசைனாக, QR Code போடப்பட்டுள்ளது. அதை மொபைலில் ஒருவர் ஸ்கேன் செய்கையில், பணம் அனுப்பும் வகையில் UPI க்குள் செல்கிறது.

யாஷ் மெஹந்தி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அட இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் `நம்ம குடும்பத்துக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி தேவையா கோபி' என அண்ணன்கள் தலைதெறித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். 

`அக்காக்கள் இல்லாத வீடு, அரை வீடு' - நா. முத்துகுமார்...

ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்!



from விகடன்

Comments