Ramcharan: மகழசசயல சரஞசவ!' ரமசரண - உபசன ஜடககப பண கழநத!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான  ராம்சரணும் அவரின் மனைவி உபாசனா காமினேனியும் அவர்களின் முதல் குழந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

ராம் சரண், சில மாதங்களுக்கு சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து தன் மனைவி மற்றும் குழந்தையுடன் நேரம் செலவிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

நடிகர் ராம்சரண்- உபாசனா

இந்நிலையில் இன்று (ஜூன் 20) அதிகாலையில் ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு  ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், என பலரும் சமூகவலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராம்சரண்- உபாசனா

நடிகர் ராம்சரண்- உபாசனா தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு திருமணமானது. உபாசனா அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரும் செயல் தலைவருமான பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.



from விகடன்

Comments