`தெய்வமகள்' பிரகாஷ் ஆக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. சன் டிவியில் ஒளிபரப்பான `தாலாட்டு' தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.
அந்தத் தொடர் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
"தெய்வமகள் பிரகாஷ் என்பதுதான் எனக்குன்னு ஒரு பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. இன்னமும் என்னை பிரகாஷ்னுதான் மக்கள் கூப்பிடுறாங்க. அந்த சீரியலில் ஆரம்பத்தில் நான் நெகட்டிவ் ரோலில் தான் நடிக்க வேண்டியது. நெகட்டிவ் , பாசிட்டிவ்னு ரெண்டுமே பண்ணுன்னு குமரன் சார் தான் என்னை பண்ண வச்சார். அந்தத் தொடர் மூலமா கிடைக்குற எல்லா கிரிட்டிட்ஸூக்கும் குமரன் சார்தான் காரணம்!" என்றவரிடம் தாலாட்டு தொடரில் அவருடன் கதாநாயகியாக நடித்த ஸ்ருதி ராஜ் குறித்துக் கேட்டோம்.
"நான் எப்படி குமரன் சார் ஸ்கூல்ல இருந்து வந்தேனோ அதே மாதிரி `தென்றல்' மூலம் ஸ்ருதியும் குமரன் சார் ஸ்கூல்ல இருந்துதான் வந்தாங்க. அவங்க தான் என்னோட நடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் நான் குமரன் சாருக்குக் கால் பண்ணி அவங்களைப் பற்றி விசாரிச்சேன். அவங்களும் என்னைப் பற்றி சார்கிட்ட கேட்டிருக்காங்க. அவர் எங்க ரெண்டு பேர்கிட்டேயும் `சூப்பர்... நல்லா நடிப்பாங்கப்பா'னு சொல்லியிருக்கார். ஆரம்பத்துலேயே எங்க ரெண்டு பேருக்கும் ஒரு புரிதல் இருந்துச்சு!" என்றதும் தாலாட்டு திடீர்னு நிறுத்த என்னக் காரணம்னு கேட்டதும் பேச ஆரம்பித்தார்.
"என்ன காரணம்னு எங்களுக்கே தெரியாது. ஏன்னா, நாங்களே இதை எதிர்பார்க்கல. மூணு நாளைக்கு முன்னாடி நான் புரொடியூசர்கிட்ட பேசும்போது கூட அவர், `இல்லப்பா ஆகஸ்ட் வரைக்கும் போகும்!'னுதான் சொல்லியிருந்தார். அதைப் பற்றி நான் யோசிக்கவே இல்ல. ஏன்னா, நல்லா போயிட்டு இருக்கிற சீரியலை ஏன் நிப்பாட்டணும்? கதை இன்னும் இருக்கு. நாங்க யாருமே இத எதிர்பார்க்கல. லைஃப்ல சில நேரம் நாம எதிர்பார்க்காதது நடக்கும்.. அதை நாம ஏத்துக்கிட்டு கடந்து போயிடணும். புது புராஜக்ட் ரெடியாகி அவங்களும் டெலிகாஸ்ட்டிற்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் எனக்கு புரியுது. எனக்கும் அடுத்த புராஜக்ட் கிடைக்கும்னு நான் அதை எதிர்பார்த்துட்டு இருக்கேன்.
நாம எதிர்பார்க்காம ஒண்ணு நடந்தா அது கொஞ்சம் சோகமா தான் இருக்கும். ஏன் திடீர்னு ஆயிடுச்சே.. இன்னமும் போயிருக்கலாமே என்கிற வருத்தம் இருக்கு. நிறுத்தப் போறாங்க என்கிற பேச்சு கிட்டத்தட்ட நாலு ஐந்து மாசமா போயிட்டு இருந்தது. முடியுமா? இல்லையா?னு இருந்தது. ஆனா, கதை இருக்கு போகும்னு நினைச்சோம். புது புராஜக்ட்டிற்காக ஏதாவது ஒரு புராஜக்ட்டை நிறுத்திதான் ஆகணும். அது ஒருவேளை எங்களுடையதாக இருக்கலாம்! பரவாயில்ல!" என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து கிருஷ்ணா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
from விகடன்
Comments