இநதக கரணததலதன தமழ சனம இயககநரகள எனன நடகக கபபட மடடஙகறஙக" - மநதர

90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த இவர் நடிகர் அருண் விஜய் நடித்த  'பிரியம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து விஜய்யுடன் 'லவ் டுடே' அஜித்துடன் 'ரெட்டை ஜடை வயசு' பிரபுவுடன் 'தேடினேன் வந்தது' என வரிசையாக இவருக்குப் படங்கள் கமிட் ஆகின. அதன் பிறகு இவரை கவர்ச்சி நடிகையாகவே பார்க்கத் தொடங்கியது கோடம்பாக்கம். ஆனாலும் முன்னணி ஹீரோக்கள் சிலரே இவரைத் தங்களது படங்களுக்கு சிபாரிசு செய்ய ஆசைப்பட்டதாகக்கூட அப்போது செய்திகள் வெளியாகின.

ஆனால் என்ன நடந்ததோ, சுமார் 15 படங்களே நடித்திருந்த நிலையில், தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போனார்.தெலுங்குத் திரையுலத்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதாகச் சொல்லப்பட்டது.இந்நிலையில் விளம்பரப் படத்தின் ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

எப்படி இருக்கீங்க?

மந்த்ரா

''ரொம்பவே நல்லா இருக்கேன். அன்பான கணவர், அறிவான ஒரு மகள். இவங்களுடன் வாழ்க்கை எப்பவும் போல ஹேப்பியா போயிட்டிருக்கு.  தெலுங்குல 'மா' சேனல்ல சீரியல் ஒண்ணு பண்ணிட்டிருக்கேன். அந்த சீரியலுக்கு அங்க நல்ல வரவேற்பு. அங்க சில படங்களும் பண்ணிட்டிருக்கேன். ஃபேமிலி, ஆக்டிங் ரெண்டும் எப்படியோ சமமா பேலன்ஸ் பண்ணி போயிட்டிருக்கு''

தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வந்தீங்க. அந்த நாள் ஞாபகங்கள் நினைவுல இருக்கா?

மந்த்ரா

''ஓ. நல்லா இருக்கே. ஒண்ணு ரெண்டு ஸ்வீட் மெமரீஸ் என்னைக்கும் மறக்க முடியாது. விஜய் சார் நடிச்ச 'லவ் டுடே' படத்துல வாய்ப்பு வந்தது. நடிச்சேன். விஜய் சார் ஃப்ரண்டு கேரக்டர். படம் முடிஞ்சு ப்ரிவியூ பார்க்க ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் போயிருந்தோம். நானும் என் அப்பாவுடன் போயிருந்தேன். படம் முடிஞ்சு அப்பாவுடன் காரில் வீட்டுக்குப் போயிட்டிருக்கிறப்ப என்னால அழுகையைக் கட்டுப்படுத்த முடியலை. நான் அழறதைப் பார்த்த அப்பா, 'க்ளைமேக்ஸ் பார்த்து அழறயா'னு கேட்டார்.'போங்கபா, ஹீரோயினாகணும்னு ஆசைப்பட்டேன். இனி இந்த மாதிரி ஃப்ரண்ட் கேரக்டர்தான் அமையும் போல'னு சொல்லி அழுதேன்.ஆனா அடுத்த சில நாள் எதிர்பாரத ஒரு செகண்ட்ல டைரக்டர் கே. பாலச்சந்தர் சார் ஆபீஸ்ல இருந்து ஃபோன். போனா, 'அந்தக் கேரக்டரை நல்லாப் பண்ணியிருந்த. அதான் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லலாம்னு கூப்பிட்டேன்'னு சொன்னார். அந்த செகண்ட் எனக்கு ஆஸ்கர் விருது வாங்கின மாதிரி ஒரு சந்தோஷம்''

அக்கா, அண்ணி.. இப்படி நிறைய கேரக்டர்கள் இருக்கே. தமிழில் யாரும் நடிக்க கூப்பிடலையா?

மந்த்ரா

''நான் கூட நினைச்சுப் பார்த்திருக்கேன். ஏன் நம்மைக் கூப்பிட மாட்டேங்குறாங்கன்னு. எவ்ளோ தூரத்துல இருந்தாலும் ஷூட்டிங்னு வந்துட்டா நான் பக்காவா தயாராகிடுவேன். நான் நடிச்ச படங்களின் இயக்குநர்கள்கிட்டயே நீங்க இதுபத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். என்னைக் கூப்பிடாததற்கு ஒரு முக்கியக் காரணமா எனக்குத் தோணுவது, நான் சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இல்லாததுதான்னு நினைக்கிறேன். அதென்னவோ அந்தப்பக்கம் என்னால நேரம் ஒதுக்க முடியலை. சில ஃப்ரண்ட்ஸ் கூட, 'ரீல்ஸ்'லாம் ஏன் போட மாட்டேங்குறன்னு கேக்கறாங்க. இந்தப் பிரச்னையைச் சரி செய்ய முடியுதான்னு பார்க்கலாம். அதேநேரம் தமிழ் சினிமாவுல எந்த கேரக்டர் வந்தாலும் இப்பவும் நடிக்க ரொம்பவே ஆர்வமாகவே இருக்கேன்''.

பொண்ணு என்ன பண்றாங்க?

மந்த்ரா

மகள் பேரு ரிதிமா.  இன்னும் ஸ்கூல் படிப்பு முடிக்கலை. ஆனா இப்பவே எனக்கும் சேர்த்து எல்லா ஏரியாவுலயும் ஆக்டிவா இருக்காங்க. தனக்குன்னு தனியா யூ டியூப் சேனல் வச்சிருக்கா. ஆக்டிங்கிற்குத் தேவையான அத்தனை விஷயங்கள்லயும் அவளுக்கு ஆர்வம் அதிகம். ரெண்டு மூணு வருஷம் போனா அவளே ஹீரோயினா வந்தாலும் வந்துடுவான்னு நினைக்கிறேன்'' 



from விகடன்

Comments