கணவரன பரன தரமணம!' மகள மலம மணமககளகக வழததச சனன நடக ஹமமலன

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் மகன் கரண் தியோல் திருமணம் கடந்த வாரம் நடந்தது. இத்திருமணத்தில் நடிகர் சல்மான் உட்பட பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நடிகர் தர்மேந்திராவின் மகன் தான் சன்னி தியோல். எனவே தன் பேரன் திருமணத்தில் கலந்து கொண்டு தர்மேந்திரா நடனமாடினார். ஆனால் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமமாலினியும் அவரது இரண்டு மகள்கள் இஷா மற்றும் அஹானா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது பெரிய அளவில் பேசப்பட்டது. மணமக்களுக்கு ஹேமமாலினி சோசியல் மீடியாவில் கூட வாழ்த்துச் சொல்லவில்லை. தற்போது முதல் முறையாக தனது மகள் இஷா மூலம் ஹேமாமாலினி மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.

தர்மேந்திராவுடன் ஹேமாமாலினி

இது தொடர்பாக இஷா வெளியிட்டுள்ள பதிவில் கரண்-திரிஷா தம்பதி வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார். தர்மேந்திராவை ஹேமமாலினி திருமணம் செய்த போது தர்மேந்திரா தன் முதல் மனைவி பிரகாஷ் கவுர் என்பவரை விவாகரத்து செய்யாமல் இருந்தார். எனவே இத்திருமணம் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. ஹேமமாலினியே தனது திருமணத்தை வழக்கத்திற்கு மாறானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

2019ம் ஆண்டு ஹேமமாலினி அளித்திருந்த பேட்டியில், ``என் கணவரின் முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் என் வாழ்க்கையில் ஊடுருவியதாக நினைக்கவில்லை. தர்மேந்திராவை முதல் முறையாகப் பார்த்தவுடன் இவர் தான் எனக்கானவர் எனத் தெரிந்து கொண்டேன். அவருடன் எனது வாழ்நாள் முழுவதையும் செலவிட விரும்பினேன். அதோடு திருமணம் யாரையும் புன்படுத்தக்கூடாது என்றும் விரும்பினேன். நான் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால் அவரது முதல் மனைவி குடும்பத்தில் இருந்து அவரை தூக்கிச்சென்றுவிடவில்லை" என்று தெரிவித்திருந்தார். தர்மேந்திராவிற்கு முதல் திருமணம் மூலம் சன்னி தியோல், பாபி தியோல், விஜீதா, அஜிதா ஆகிய நான்கு பிள்ளைகள் இருக்கின்றன. இதில் சன்னி தியோல் மகன் தான் தான் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.



from விகடன்

Comments