சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை கரம் பிடித்த `பசங்க' கிஷோர் - சென்னையில் நடந்த திருமண நிகழ்வு!

புரொகிராம் புரொடியூசராக தன் கரியரைத் தொடங்கியவர் ப்ரீத்தி குமார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கர் டு ஆக்டராக ப்ரீத்தி குமார் தற்போது ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகும் 'கீதாஞ்சலி' தொடரில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்திக்கும் 'பசங்க' படத்தின் மூலம் பிரபலமான கிஷோருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ப்ரீத்தி - கிஷோர்

முன்னதாக கிஷோரும், ப்ரீத்தியும் காதலிப்பதாக அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக இருவரும் அறிவித்திருந்தனர். தமிழக அரசு திரைப்பட விருதுகள் விழாவில், 2009-ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை கிஷோர் சமீபத்தில் பெற்றார். 

'கோலி சோடா' முதல் பாகத்தில் நடித்திருந்த கிஷோர் தற்போது பெயரிடப்படாத அதன் அடுத்த பாகத்திலும் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ப்ரீத்தியும் சின்னத்திரையில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இருவரும் தங்கள் காதலைச் சமீபத்தில்தான் பொதுவெளியில் அறிவித்தனர்.

ப்ரீத்தி - கிஷோர்

அவர்கள் காதலை அறிவிக்கவும் பலரும் கிஷோரை விட ப்ரீத்தி வயதில் மூத்தவர், இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம் என்றெல்லாம் கமென்ட் செய்துவந்தனர். 'காதலுக்கும், வயசுக்கும் என்னங்க சம்பந்தம்' என அவர்களுடைய ரசிகர்கள் அதற்குப் பதில் கொடுத்து வருகின்றனர்.

பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நேற்று அவர்களுடைய திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர்களுடைய ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

ப்ரீத்தி - கிஷோர்

வாழ்த்துகள் ப்ரீத்தி - கிஷோர்! 



from விகடன்

Comments