அவள் விருதுகள்: `சினிமாக்கு வந்து 40 வருஷம் ஆகிடுச்சுனு யோசிச்சதில்லை' - நடிகை மீனா |#Visual story

மீனா - கே.பாக்யராஜ் - நடிகை அம்பிகா.

அவள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகப் பெருமக்களின் நெஞ்சங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் மீனாவுக்கு, `எவர்கிரீன் நாயகி' விருதை வழங்கினார்கள், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் மற்றும் நடிகை அம்பிகா.

நடிகை மீனா

``ஃபீல்டுக்கு வந்து 40 வருஷமாயிடுச்சுன்னு நான் யோசிச்சதே இல்லை; அந்த சக்ஸஸை கொண்டாட நேரமும் இருந்ததில்லை. கொஞ்சநாள் முன்னாடி என் வாழ்க்கையில நடந்த இழப்புல இருந்து என்னை மீட்டெடுத்தது அவள் விகடன்தான். அவள் டீமுக்கு என்னுடைய நன்றி’’ என்று கண்கலங்கினார், நடிகை மீனா.

பிரியா பவானிஷங்கர் - நடிகை அம்பிகா

செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கி சீரியல், சினிமா என அடுத்தடுத்த தளங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கருக்கு `அவள் ஐகான்’ விருதை, 80-களின் நாயகி நடிகை அம்பிகா வழங்கினார். 

பிரியா பவானிஷங்கர்

மென்மையான குரலில் பேச ஆரம்பித்தவர், வீக் எண்டில் தன் வீட்டு மொட்டைமாடி சீக்ரெட்; நியூஸ் ரீடிங் சேலஞ்ச்; நடிகர் கார்த்திக்கும் தனக்குமான நட்பு என செம இன்ட்ரெஸ்ட்டிங் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாகமணி - விஜய் சேதுபதி - ஜெயப்பிரகாஷ் - வடிவுக்கரசி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணிக்கு ‘பெஸ்ட் மாம்’ விருது வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து  நடிகர் ஜெயப்பிரகாஷும், நடிகை வடிவுக்கரசியும் விருது வழங்கினார்கள்.

நாகமணி

``என் குழந்தை முன்னுக்கு வந்ததால தான், நான் இன்னிக்கு இந்த மேடையில நின்னு கிட்டிருக்கேன்’’ என்று நெகிழ்ந்தார், நாகமணி.

பாடகி வாணி ஜெயராம் - குன்றக்குடி அடிகளார்

19 இந்திய மொழிகளில் பாடியுள்ள ஒரே பாடகி வாணி ஜெயராமுக்கு ‘கலைநாயகி’ விருது வழங்கினார்கள் குன்றக்குடி அடிகளாரும், பாடகரும் மருத்துவருமான சீர்காழி சிவ சிதம்பரமும். 

பாடகி வாணி ஜெயராம்

``ஐயா கரங்களால் விருது பெறுவது மகிழ்ச்சி’’ என்று நெகிழ்ந்த வாணியம்மா, தன்னுடைய சிக்நேச்சர் பாடலான `மல்லிகை என் மன்னன் மயங்கும்...’ பாடலைப் பாடினார்.



from விகடன்

Comments