லவ் டுடே படம் எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னு சொல்லுங்க?
'' 'கோமாளி' படம் முடிச்சிட்டு என்னை எல்லாரும் படம் பண்றதுக்கு வெல்கம் பண்ணுனாங்க. ஒரு பெரிய ஹீரோவுக்குப் படம் பண்ற மாதிரி இருந்தேன். அப்போதான் கொரோனா லாக்டௌன் வந்துச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ என்னுடைய ஷார்ட் பிலிம் ஆப்லாக் ஸ்கிரிப்ட் ஆந்தாலஜிக்கு ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். ஸ்கிரிப்ட் டெவலப் பண்ணுறப்போ ப்யூச்சர் படமா எடுக்கலாம்னு தோணுச்சு. ஸ்கிரிப்ட் எழுதிட்டு ஏ.ஜி.எஸ்கிட்ட கொடுத்தேன். இவங்களுக்கும் கதை பிடிச்சிருந்தது. உடனே, ஓகே சொல்லிட்டாங்க. டைரக்டரா என்கூட இருக்கவும் ரெடியா இருந்தாங்க.''
டைரக்டர் ஓகே, ஹீரோ எப்படி முடிவாச்சு?
'' ஆக்சுவலி, 'என்னை ஹீரோவா நடிக்கக் கட்டாயப்படுத்துனாங்க’ன்னு சொன்னா கேவலமான பொய். நமக்கு ஒரு ஆசை இருந்தா நாமதான் இதை நிறைவேத்தணும். இதை நிறைவேத்திக் கொடுக்க இங்கே யாரும் கிடையாது. இதனால, நான் நிறைவேத்திக்கிட்டேன். 'கோமாளி' படம் பண்ணும்போதே அடுத்த படத்துல நடிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன். சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல தீராத காதல் இருக்கு. என்கிட்ட காசு இல்லாத காரணத்துனால எடிட்டிங், vfx, மியூசிக் இதெல்லாம் கத்துக்கிட்டு ஷார்ட் பிலிமுக்கு வொர்க் பண்ணுவேன். இப்படிதான் நடிப்பும் எனக்குள்ள வந்துச்சு. என்னுடைய ஷார்ட் பிலிம் பார்த்துட்டு, நடிச்சா நல்லாருக்கும்னு புரொடியூசரும் சொன்னார். சந்தோஷமா நடிகனா அறிமுகமாகிட்டேன். ஹீரோயின் என்னைவிடச் சின்னப் பொண்ணா இருந்தா கதைக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு. அப்போ என்னுடைய ப்ரெண்ட் இவானாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் காட்டினான். கதைக்குத் தேவைப்படுற முகமா இருந்ததனால சரியா இருக்கும்னு தோணுச்சு. நல்லா நடிக்கத் தெரிஞ்ச நடிகை இவனா. படத்துல ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க.''
பெரிய ஹீரோவுக்குக் கதை பண்ணியிருந்தேன்னு சொன்னீங்க, அந்த ஹீரோ விஜய்யா?
'' இப்போ, சில விஷயங்களை பெர்மிஷன் வாங்காம சொல்ல முடியாது. அதனால, யார்னு என்னால சொல்ல முடியல.”
உங்களுடைய ஷார்ட் பிலிம்ல டெல்லி கணேஷ் அப்பா கேரக்டர் பண்ணியிருந்தார், இதுல சத்யராஜ் வந்தது எப்படி?
'ஆப்லாக்' ஷார்ட் பிலிம் எல்லார்கிட்டயும் சேர்ந்ததுக்கு டெல்லி கணேஷ் சார் முக்கிய காரணம். ரொம்பப் பெரிய நடிகரா ஷார்ட் பிலிம்ல நடிச்சியிருந்தார். ஆனா, இந்த கதையை டெவலப் பண்ணிட்டு ப்யூச்சர் பிலிம் எடுக்கலாம்னு முடிவு பண்ணுனப்போ சத்யராஜ் சார் பண்ணுனா நல்லாருக்கும்னு தோணுச்சு. ஹிப்ஹாப் ஆதி ஜீவாகிட்ட இதைச் சொன்னேன். 'செமயா இருக்கும்’னு இவரும் சொன்னார். இந்தக் கதையை சத்யராஜ் சார் ஆரம்பிச்சு வைக்குற மாதிரி ராதிகா சரத்குமார் முடிச்சு வைப்பாங்க. ஒரு பவர்புல்லான கேரக்டர் கதையோட பெர்சனலாட்டியா வந்து நடிச்சாங்க. ராதிகா மாதிரியான நடிகை பார்த்ததே இல்ல. இவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். யோகி பாபு காமெடியைத் தாண்டி நிறைய வெர்ஷன் காட்டியிருக்கார். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சிருக்கார்.
ட்ரெய்லர் பார்த்துட்டு யார் போன் பண்ணுனாங்க?
'' 'படம் செமயா இருக்கு'ன்னு எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா, இதை முதல்ல சொன்னது நானா இருப்பேன்’னு சிம்பு சொன்னார். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. 'லவ் டுடே' படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி பண்ணுற போது 'வல்லவன்' பர்ஸ்ட் லுக் மாதிரி இருக்கணும்னு மனசுல நினைச்சிக்கிட்டு வேலை பார்த்தேன். சிம்புகிட்ட இருந்து வந்த கால் எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருச்சு. அதே மாதிரி சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கும் ட்ரெய்லர் பிடிச்சிருந்தது. போன் பண்ணிக் கூப்பிட்டு வாழ்த்தினார்.''
from விகடன்
Comments