தீபாவளி ரிலீஸில் வரவேற்பைப் பெற்று வரும் படம் எது? - திருப்பூர் சுப்ரமணியம்

கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' ஆகிய படங்கள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கு கார்த்தியின் 'சர்தார்', சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ஆகிய படங்கள் வெளியானது.

லைகா தயாரித்த மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் மட்டும் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூலை ஈட்டிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். கன்னடப்படமான 'காந்தாரா' சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி, இப்போது பான் இண்டியா படமாக 250 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது என்றும் தகவல். 'கே.ஜி.எஃப்' படத்தை தயாரித்த நிறுவனம் தான் 'காந்தாரா'வையும் தயாரித்திருக்கிறது. கர்நாடகாவில் 'கே.ஜி.எஃப்' பாகங்கள் வசூலைக் குவித்தாலும், உண்மையில் அதிகம் பேர் பார்த்து ரசித்த படமாக அங்கே 'காந்தாரா'வைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சர்தார்

இந்நிலையில் தீபாவளி ரிலீஸ்களான 'பிரின்ஸ்', 'சர்தார்' வரவேற்பில் எப்படி இருக்கிறது? 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' படங்களின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்டேன்.

'' 'பொன்னியின் செல்வன்' இன்னமும் நல்லா போய்ட்டிருக்கு. அதோட கலெக்‌ஷன் எல்லா ரெக்கார்டுகளையும் பிரேக் பண்ணிடுச்சு. ஆனால், காட்சிகளை அதிகப்படுத்தல. தீபாவளி படங்கள்ல கார்த்தியின் 'சர்தார்' நல்லா போய்கிட்டிருக்கு.

திருப்பூர் சுப்பிரமணியம்

தமிழகத்தில் 'கே.ஜி.எஃப்' பெரியளவுல வசூலாச்சு. அந்தப் படம் ஓடுனதுல 20 சதவிகிதம் கூட `காந்தாரா'வை ஒப்பிடமுடியாது. ஆனாலும் வழக்கமான கன்னடப்படத்தை விட பிரமாதமான வரவேற்பு 'காந்தாரா'வுக்கு இருக்கு. மால்கள், மல்டிஃபிளக்ஸ்கள்ல நல்லபடியாவே போய்கிட்டிருக்கு. இன்னும் ரெண்டு மூணு வாரம் கூட தாக்குப்பிடிக்கும். கிராமப்புறங்கள்ல ஒரு சில தியேட்டர்கள்ல 'சர்தார்' காட்சிகள் கூடுதலாக்கியிருக்காங்க என்பதும் உண்மைதான். மத்தபடி தீபாவளி படங்கள்தான் இன்னமும் எல்லா இடங்கள்லேயும் போய்க்கிட்டிருக்கு!''



from விகடன்

Comments