எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சு. பொன்னியின் செல்வன் புத்தகங்களை வாங்கிப் படிப்பது, பாட்காஸ்ட், ஆடியோ புக் என எப்படியாவது பொன்னியின் செல்வன் படித்து முடித்துவிட வேண்டும் என்ற பரபரப்பில் மக்கள் மும்முரமாகியிருக்கிறார்கள்.
காரத்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என சென்சேஷனல் நடிகர்கள் அனைவரையும் பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களாக மாற்றி கச்சிதமாக களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்தியா எதிர்பார்க்கும் இயக்குநர். உலகத் தமிழர்கள் எதிர்பார்த்திருக்கும் படைப்பு என பயங்கர மைலேஜிலிருக்கும் பொன்னியின் செல்வன் படம் உருவான விதம், கதாபாத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டது என பல விஷயங்களை ஆனந்த விகடனுக்காகப் தெரிவித்திருக்கிறார்.
``எம்.ஜி.ஆர், கமல்னு முயற்சி பண்ணின ‘பொன்னியின் செல்வன்' உங்களுக்கு எப்படிக் கைகூடி வந்தது?’’
"எம்.ஜி.ஆரும் கமலும் இதை எனக்காக விட்டுக்கொடுத்திருக்காங்கன்னு சொல்லணும். எம்.ஜி.ஆர் நினைத்ததை முடிப்பவர். அவரே நமக்குக் கொடுத்திட்டுப் போயிருக்கார்னு நினைப்பேன். இப்ப என்ன வசதின்னா, இதை இரண்டு பாகமாகச் செய்யலாம். முன்னாடி ஒரே பாகமாகப் பண்ணியிருப்பாங்க. ஐந்து பாகத்தை மூணு மணி நேரத்திற்குள் சுருக்கறது ரொம்பக் கடினம். அவசரமா கதை சொல்ல வேண்டியிருக்கும். சம்பவங்கள் விட்டுப்போயிரும். இப்ப அப்படியில்லை. அதை ரொம்பவும் நன்றாகச் சொல்ல வாய்ப்பிருக்கு.''
``15 வருஷங்களுக்கு முன்னாடியே நீங்க செய்ய நினைத்த படம் இது. அப்ப செய்திருந்தால் யாரையெல்லாம் வைத்துச் செய்திருப்பீங்க?’’
‘‘முதல் தடவை நினைச்சபோது கமல் சார் மட்டுமே களத்தில் இருந்தார். அது நடக்காமல்போச்சு. அதற்குப் பிறகுகூட இரண்டு மூன்று தடவை முயற்சி செய்திருக்கேன். கமல் சார்கிட்ட பேசினது ஆரம்பம்தான். பிற நடிகர்கள் யாருன்னு பேசவேயில்லை. 2010-ல் விஜய்யை வந்தியத்தேவனாகவும், மகேஷ்பாபுவைப் பொன்னியின் செல்வனாகவும் விக்ரமை ஆதித்த கரிகாலனாகவும் வச்சு ஆரம்பிச்சோம். ஆனால் அது நடக்கவேயில்லை. அதுகூட நல்லதுதான். அப்ப செய்திருந்தால் ஒரு படமாகத்தான் எடுத்திருப்பேன். பொன்னியின் செல்வனே அதற்கான காலத்தைத் தேர்ந்தெடுத்திருக்குன்னு சொல்லணும்.''
* ``வரலாற்றுப் படங்களில் எதை அதிகம் விரும்பியிருக்கீங்க?’’
* ``ஐந்து பாகங்களான பொன்னியின் செல்வனை இரண்டு பகுதிகளாகப் பண்ணும்போது என்னென்ன சிரமங்கள் இருந்தன?’’
* ``அந்தக் காலத்தை நிறுத்தற இடங்கள், உடைகள், உண்மைத்தன்மைக்கு எப்படி சிரமப்பட்டீங்க?"
* ``ரஜினி பழுவேட்டரையராக நடிக்க ஆசைப்பட்டிருக்காரே... ஏன் விட்டீங்க?’’
* ``நடிகர்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’
இதுபோல இன்னும் பல கேள்விகளுக்கு மணிரத்னம் அளித்த ப்ரத்யேகமான பதில்களையும், படத்தின் ஸ்டில்களையும் காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
from விகடன்
Comments