முதன்முதலில் ஐரோப்பாவில் 1550, ஜூலை 7-ம் தேதி சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தினமே சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பண்டைய மாயன்கள் (Mayans) cocoa beans-ஐ நாணயமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்கத்தை விட உயர்ந்ததாக அவர்கள் சாக்லேட்டை கருதினர்.
மனித ரத்தத்தின் வெப்பநிலையிலேயே சாக்லேட் உருகும் தன்மை உடையது. எனவேதான் வாயில் வைத்தவுடன் உருகி, இனிப்புச் சுவையின் திருப்தியை அளிக்கிறது.
400 கோகோ பீன்ஸ்களை கொண்டு ஒரு பவுண்டு சாக்லேட்டை தயாரிக்க முடியும்.
ஆறு நிமிடங்களில் இரண்டு சாக்லேட் பார்களை சாப்பிட்ட உலக சாதனை நிகழ்ந்துள்ளது.
பெல்ஜியம் 2013-ம் ஆண்டில், கோகோவின் வாசனையுடன் கூடிய 5,00,000 தபால்தலைகளை சாக்லேட் போல வார்னிஷ் செய்து வெளியிட்டது.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரிட்டிஷ் மக்கள் தான் அதிக சாக்லேட்களை சாப்பிடுகின்றனர்.
வெள்ளைநிற சாக்லேட்கள் அசலானவை அல்ல. அசல் சாக்லேட் என்பது, கோகோவின் திடப்பொருளை, அல்லது மதுவை கொண்டிருக்கும். வெள்ளை சாக்லேட் கோகோவின் எண்ணெயைக் கொண்டிருக்கிறது.
டார்க் சாக்லேட் தான் அசல் சாக்லேட் என்று சொல்லப்படுகிறது.
தேசிய சில்லறை கூட்டமைப்பு (National Retail Federation) ஆய்வின்படி, காதலர் தினத்தன்று கிட்டத்தட்ட $1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சாக்லேட்களை வாங்குகின்றனர்.
from விகடன்
Comments