Power Rangers: 30 ஆண்டுகள்; 900 எபிசோட்கள்; 27 சீசன்கள் 90'ஸ் கிட்ஸின்‌ நாஸ்டால்ஜிக் சாகசத் தொடர்!

`ஹாஸ்ப்ரோ' என்ற பொம்மை நிறுவனம்தான் முதலில் பவர் ரேஞ்சர்ஸ் தினத்தைக் கொண்டாட ஆரம்பித்து. 1993ல் சூப்பர் செண்டாய் என்ற ஜப்பானிய தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த பவர் ரேஞ்சர்ஸ் தொடருக்கு குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பவர் ரேஞ்சர்ஸ் பல சீசன்களைக் கொண்டது. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு கதைக்களம் இருக்கும்.
பவர் ரேஞ்சர்ஸ் |Power Rangers

பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் உள்ள ஒவ்வொரு ரேஞ்சர்ஸும் ஒவ்வொரு வண்ணத்தில் உடையனிந்து பல தீய சக்திகளுக்கு எதிராக சாகசங்கள் செய்வர். இந்தத் தொடரின் நாயகர்களான பவர் ரேஞ்சர்கள் தங்களின் சாகசங்களால் தீயவர்களை அழிப்பதே கதை. மற்ற சூப்பர் ஹீரோ தொடர்களில் இருந்து இது வேறுபட்டு தனித்தன்மையுடன் இருந்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரேஞ்சர்ஸ் ஒவ்வொருவருக்கும் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, ஊதா என வண்ண உடைகள் இருக்கும். தங்களுக்கு தரப்பட்ட மார்ஃப்பர் (Morpher) என்ற உருமாற்றியை பயன்படுத்தி வண்ண உடையணிந்த ரேஞ்சர்களாக மாறி தீயவர்களை அழிப்பர். இவர்களுக்கென பொதுவான ஆயுதமும் தனித்தனியே அவர்களுக்கென ப்ரத்யேக ஆயுதங்களும் சக்திகளும் இருக்கும். பவர் ரேஞ்சர்ஸ், ஸோர்டஸ் (Zords) எனப்படும் சூப்பர் ஹீரோ பவர்களை கொண்டவர்களாக இருப்பர். தீயவர்களை கூட்டாகவும், தனித் தனியாகவும் அழிப்பர். ஒவ்வொரு சீசனுக்கும் அந்தந்த காலத்தின் ட்ரெண்டிற்கேற்ப தனிக் கதைக்களம் அமைந்திருக்கும்.

பவர் ரேஞ்சர்ஸ் |Power Rangers

பவர்‌ ரேஞ்சர் மைட்டி மார்ஃபின், டைனோ தண்டர், மிஸ்ட் ஃபோர்ஸ் போன்ற சீசன்கள் மிகவும் ஹிட் அடித்தன. டோய் என்ற அமெரிக்க நிறுவனம் தயாரித்து ஃபாக்ஸ் கிட்ஸ் சேனலில் தான் முதன்முதலில் பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸ் வெளிவந்தது. முதலில் பவர் ரேஞ்சர்ஸ் கார்ட்டூன் வடிவில் தான் வந்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடராகவும் பின்பு திரைப்படமாகவும் வெளிவந்தது. வீடியோ கேம்ஸிலும் பவர் ரேஞ்சர்ஸை நாம் பார்க்க முடியும்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக 900 எபிசோட்ஸ் மற்றும் 27 சீசன்களாக ஒளிபரப்பாகிறது பவர் ரேஞ்சர்ஸ். இந்தப் பவர் ரேஞ்சர்ஸ் தினத்தில் பவர் ரேஞ்சரின் தீவிர ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பவர் ரேஞ்சரின் உடையை அணிந்து பழைய பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸைப் பார்த்து தீம் பார்ட்டியாக கொண்டாடுகின்றனர்.

பவர் ரேஞ்சர்ஸ் |Power Rangers

பவர் ரேஞ்சர் ரசிகர்கள் பவர் ரேஞ்சர்ஸ் தினத்தை கொண்டாடுவதால் தம் குழந்தை பருவத்தின் நினைவுகளை மீட்டெடுப்பதாகவும், மீண்டும் ஒரு நாள் தன் வாழ்வில் குழந்தையாகவே தன்னை மறந்து மகிழ்வுடன் இருப்பதாக கூறுகின்றனர். உங்களுக்கு பிடித்த பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸ் எது? உங்களுக்கு பிடித்த பவர் ரேஞ்சர் யார்? என்பதையும் கமென்ட் பண்ணுங்க....



from விகடன்

Comments