துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 148 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.
முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்களே தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தில் ஜடேஜா போல்டானார். ஒரு கட்டத்தில் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. முன்னதாக பந்து வீச்சிலும் ஹர்திக் பாண்டியா அபார திறனை வெளிப்படுத்தியிருந்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments