பர்சனல் தொடங்கி புரொஃபசனல் வரை, விகடன் பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்குச் சளைக்காமல் பிரபலங்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி 'விகடன் பிரஸ்மீட்'. 2018-ல் விஜய் சேதுபதியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், விஷால், அரவிந்த்சாமி, சிம்பு, கமல், யுவன்ஷங்கர் ராஜா, ஜெயம் ரவி எனப் பல முன்னணி பிரபலங்கள் இதுவரை பங்குகொண்டிருக்கிறார்கள்.
தனது முதல் படமான 'பருத்தி வீரன்' தொடங்கி மணிரத்னம் இயக்கத்தில் அவர் இப்போது நடித்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' வரை திரைத்துறையில் அவரது பலதரப்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார் கார்த்தி.
பிரஸ் மீட்டின் முதல் பாகத்தில் கார்த்தி திரைத்துறைக்கு எப்படி வந்தார், மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக எப்படிச் சேர்ந்தார், அமீர் படத்தில் (பருத்திவீரன்) நடிக்க வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசியுள்ளார். தனது முதல் படத்தின் அனுபவங்கள், தன் ஆரம்பக்கால கட்ட அனுபவங்கள் எனப் பல புதிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் பாகத்தில் கார்த்தியுடன் பணியாற்றிய பிரபலங்களின் காணொலியைத் தயார் செய்து, அவருக்குக் காண்பித்தோம். அதில் சிறுத்தை சிவா, செல்வராகவன், சுசீந்திரன் மற்றும் நடிகை பிரியாமணி ஆகியோர் கார்த்தியுடன் பணியாற்றிய அனுபவங்களுடன் சேர்த்து ஆளுக்கொரு முக்கியமான கேள்வியும் கேட்டுள்ளனர். (அனைவரும் ஆவலாகக் காத்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' பற்றிய கேள்வியும் இதில் உண்டு!)
மூன்றாம் பாகத்தில் கார்த்தியின் தோல்வி படங்கள் பற்றியும், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் நடந்த அழகான நிகழ்வுகள், ஜெயம் ரவியின் நடிப்பு, 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெளிவராத டயலாக், மலையாளத்தில் வெளிவந்த 'ஐயப்பனும் கோஷியும்' படத்தின் தமிழ் ரீமேக்கீல் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிப்பது போன்ற பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் கார்த்தி.
நான்காம் பாகத்தில் கார்த்தி தவறவிட்ட படங்களின் லிஸ்ட், லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தின் அடுத்த பாகம், 'கைதி' படத்தில் இடம்பெற்ற அடுத்த பாகத்திற்கான சர்ப்ரைஸ் லீட் சீன்ஸ், 'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த குதிரையின் நடிப்பு, மணி ரத்னத்தின் மேக்கிங் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
கார்த்தி விகடன் பிரஸ் மீட்டின் அனைத்து பாகத்தையும் சினிமா விகடன் யூடியூப் சேனலில் பார்த்து மகிழுங்கள். அதில் நீங்கள் உணர்ந்த நிறை குறைகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
from விகடன்
Comments