15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுகிறது.
இதனிடையே, இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது 100-வது டி 20 ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.33 வயதான அவர், பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். விராட் கோலி கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பரில் சர்வதேச அரங்கில் சதம் அடித்திருந்தார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி டெஸ்டில் 27 சதங்கள், ஒருநாள் போட்டியில் 43 சதங்கள் அடித்துள்ளார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக அதிக அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஆசிய கோப்பையில் அவர், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments