3 , வை ராஜா வை, போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் 3 மொழிகளில் வெளியிடப்பட்ட அவரது பயணி ஆல்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷ் உடனான பிரிவை அறிவித்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷைப் பிரிந்த பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தன்னை பற்றிய போட்டோக்கள், வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகிறார். வருமான வரி தினம் ஜூலை 24-ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிகப்படியான வரி செலுத்தியதற்காக வழங்கப்பட்ட விருதினை ரஜினிகாந்த் சார்பில் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்தது.
Was a delight catching up this evening over coffee with you dear @BoneyKapoor uncle ..reminiscing old times,remembering pappi akka n discussing interesting work ! pic.twitter.com/GzIly2220w
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) July 24, 2022
இந்நிலையில் மும்பைக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கதில் தயாரிப்பாளர் போனி கபூருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் உங்களை சந்தித்து, உங்களுடன் காஃபி சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பு பழைய நினைவுகளையும் பப்பி அக்கா (ஸ்ரீதேவி) பற்றிய நினைவுகளையும் ஞாபகப்படுத்தியது என்றும், அவருடன் சுவாரஸ்யமான கதையையும் பகிர்ந்து கொண்டதாகவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் அஜித்தின் 61 படம் குறித்து அப்டேட் ஏதாவது இருக்கா? என்றும், சிலர் நடிகர் ரஜினியை வைத்து போனி கபூருடன் இணைந்து படம் இயக்க போறீங்களா என்றும் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
from விகடன்
Comments