மாமனிதன்: "`அப்பா, நாம சேர்ந்து வொர்க் பண்ணலாம்'ன்னு சொன்னப்ப, அவர் ரியாக்‌ஷன்..."- யுவன்ஷங்கர் ராஜா

இயக்குநர் பாலு மகேந்திராவிற்குப் பிறகு எதார்த்த வாழ்க்கையை திரையில் கொண்டுவருவதில் அவரின் மாணவரான சீனு ராமசாமி ஒரு தேர்ந்த கலைஞர். 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' முதலிய அவரின் படங்களின் வரிசையில் இன்று வெளியாகவுள்ளது 'மாமனிதன்' திரைப்படம். விஜய் சேதுபதி, காயத்ரி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு 'இசைஞானி' இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தை யுவனே தயாரித்தும் உள்ளார். படம் குறித்து யுவன் ஷங்கர் ராஜாவுடன் உரையாடியதிலிருந்து சிறு பகுதி இதோ...

யுவன் ஷங்கர் ராஜா

இளையராஜா சார் கூட இணைந்து நம்ம வொர்க் பண்ணலாம். அந்தப் படத்தை நம்மளே தயாரிக்கலாங்கிற ஐடியா எப்படி வந்தது?

"அப்பா கூட சேர்ந்து வொர்க் பண்ணணும்ன்ற ஐடியா ரொம்ப நாளாவே இருந்தது. ஒரு நாள் இதுபத்தி விஜய் சேதுபதி கிட்ட ஒரு ஃப்லோல சொல்லிட்டேன். உடனே நான் நடிக்கிறேன்னு அவர் சொல்ல, சீனு சார் கூட பேசி இந்தப் படம் நடந்தது."

நீங்க இளையராஜா சார் கிட்ட,"அப்பா நம்ம சேர்ந்து வொர்க் பண்ண போறோம்" அப்படின்னு சொன்னதும் அவர் என்ன சொன்னாரு?

"அப்படியா யார் ஹீரோனு அப்பா கேட்டாரு. விஜய் சேதுபதின்னு சொன்னேன், சரி ஒகே பண்ணிடலாம்னு சொன்னாரு. அப்புறம் டிஸ்கஸ் பண்ணி, பாடல்களை நீங்க பண்ணுங்க, நான் அரேஞ்ச் பண்றேன்னு சொன்னேன். பின்னணி இசையையும் நீங்களே பண்ணிடுங்கன்னு சொன்னேன்."

யுவன் ஷங்கர் ராஜா

அப்பாகூட நீங்க மியூசிக் வொர்க்ல உட்காரும் போது எப்படி இருந்தது?

"படம் பார்த்து முடிச்ச பிறகுதான் அப்பா சாங்க்ஸ்ல உட்கார்ந்தாங்க. அதுல அப்பா கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். 25 நிமிசத்துல 5 பாடல்களை அப்பா கம்போஸ் பண்ணி முடிச்சுட்டாரு."

உங்களுடைய 25 வருட இசை வாழ்க்கைல, அப்பா கூட சேர்ந்து வொர்க் பண்ணின படம் ரிலீஸ் ஆகப்போகுது. இதோட ரிலீஸ் முதல் தடவை தள்ளிப் போனதும் வருத்தம் எதுவும் இருந்ததா?

"இல்ல, எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கும். சரியான நேரத்துக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம். ஆனந்த யாழை பாடலை நான் மிக்ஸிங், மாஸ்டரிங் பண்ணி ஐந்து வருஷத்திற்குப் பிறகுதான் ரிலீஸ் ஆச்சு. இருந்தும் மக்கள் கிட்ட போய் சேர்ந்தது."

நீங்க இந்தத் திரைப்படத்தை தியேட்டர்லதான் ரிலீஸ் பண்ணனும்னு உறுதியா இருந்தீங்களா?

"இல்ல, ஓ.டி.டியும் முயற்சிசெஞ்சோம். அதுக்கு அப்புறம் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாதான் சரியா இருக்கும்னு முடிவெடுத்து தியேட்டர் ரிலீஸுக்குக் கொண்டு வந்தோம்."



from விகடன்

Comments