உதவி செய்வதே என் குறிக்கோள் - விஜயசாந்தி #AppExclusive

ஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? ' என்று தமிழகத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் பட்டிமன்றம் நடந்த அளவுக்கு இல்லையென்றாலும் , ' விஜயசாந்தி அரசியலுக்கு வருவாரா ? ' என்று ஆந்திராவே பரபரத்துக்கொண்டிருக்கிறது .

விஜயசாந்தியைச் சந்திக்க சென்னை தி . நகரில் இருக்கும் அவரது வீட்டுக்குப் போனோம் . இரண்டு கூர்க்காக்களும் இருபதுக்கு மேற்பட்ட மரங்களும் சுற்றி நின்று காவல்காக்க . . சலவைக் கற்கள் இழைக்கப்பட்ட பளபளப்பான வீடு . வரவேற்பறையில் விஜயசாந்தி நமக்காகக் காத்திருந்தார் . அவருக்குப் பின்னால் நான்கு , ஐந்து வெங்கடாசலபதிகளும் இரண்டு அலமேலுமங்கையர்களும் சரவிளக்கும் பூஜைமணியும் சூழ ஷெல்ஃபில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார்கள் .

"என்ன தாமரைப் பூவையே காணோம் ? ” என்று சூசகமாகவே கேள்வியை வைத்தோம் .

ஆனால் , விஜயசாந்தி நமது கேள்விக்கு நேரடியாகவே இப்படி விளக்கமாகப் பதில் சொன்னார் :

"எனக்கு ஆந்திராவில் 2,200 ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன . அதிலே லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . இவர்களை ' என்னோடு வாருங்கள் ' என்று நான் அரசியலுக்குக் கூட்டிச்சென்றால் , நான் ஒரு சுயநல வாதி என்று ஆகிவிடாதா ? என்னுடைய சினிமா நடிப்பை ரசிக்க சங்கம் வைத்தவர்களை , என் அரசியலையும் ரசி ' என்று சொன்னால் , அது மோசடி.

Exclusive interview Vijaya shanti

" அரசியலில் சேர்ந்தால் பதவி ஆசை வரும் . . தேர்தலில் ஜெயிப்பதற்காகப் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கவேண்டி வரும் . . "இல்லையா ?

சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன்பு எனக்கு ஒரு விஷயம் லேட்டாக உறைத்தது . அந்த யோசனைக்கு உடனடியாகச் செயல் வடிவம் கொடுத்தேன் . இனிமேல் என் ரசிகர்கள் பாரும் தங்களின் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து எனக்கு போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டாம் ! கட் - அவுட் வைக்க வேண்டாம் ! ' என்று உத்தரவு போட்டேன் . அதோடு என் ரசிகர் மன்றங்கள் அத்தனையையும் ஆஷா ஜோதி விஜயசாந்தி யுவசேனா ' என்ற இளைஞர்கள் மன்றமாக காற்றினேன் . ஆதரவற்றவர்களுக்கும் அநாதைகளுக்கும் உதவி செய்வதுதான் சிவசேனாவின் குறிக்கோள் ! மற்றபடி அரசியலில் சேரும் எண்ணம் எனக்குக் கொஞ்சமும் முடையாது ! காரணம் , அரசியலில் சேர்ந்தால் பதவி ஆசை வரும் . தேர்தலில் ஜெயிப்பதற்காகப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவேண்டிய கட்டாயம் வரும் ! அதனால் அரசியலுக்கு வர எனக்கு ஆசை இல்லை ! "

Exclusive interview Vijaya shanti

ஆனால் , உங்களின் பேச்சு , செயல் , யுவசேனா . . இதெல்லாம் நீங்கள் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கான வெள்ளோட்டம் மாதிரி அல்லவா தெரிகிறது ! நீங்கள் கடந்த பொதுத்தேர்தலின் போதே இரண்டு வேட்பாளர்களுக்குத் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறீர்கள்!

பிறகு , தாசரி நாராயணராவ் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் கட்சியில் சேர்ந்துகாங்கிரஸையும் சந்திரபாபு நாயுடுவையும் நீங்கள் எதிர்க்கப் போவதாகச் செய்தி வந்தது ! இப்போது லேட்டஸ்டாக ..."

நம்மை இடை மறித்துப் பேசிய விஜயசாந்தியின் குரலில் இப்போது லேசாகக் கோபம் எட்டிப்பார்த்தது .

" நான் ஆதரித்துப் பிரசாரம் செய்த சாரதாவும் சரி , மறைந்த எம் . சுப்பா ரெட்டியின் துணைவியார் பர்வதம்மாவும் சரி என் நண்பர்கள் . அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் போகத் தகுதியானவர்கள் என்று நம்பினேன் . அதனால் பிரசாரத்துக்குப் போனேன் . மற்றபடி எந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் ஆதரித்து நான் பிரசாரம் செய்யவில்லை ! எந்தப் புதுக் கட்சியிலும் சேரப்போவதில்லை ! "

அப்படி என்றால் , இப்போது பாரதிய ஜனதாவின் தலைவர் அத்வானியை ஏன் சந்தித்தீர்கள் ? "

"அத்வானியோடு நான் நடத்திய சந்திப்பு மரியாதை நிமித்தம் நடந்தது . அத்வானி ஒரு பெரிய அரசியல் தலைவர் . நேர்மையானவர் என்பதில் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்க முடியாது . என்னுடைய யுவசேனாவை விரிவுபடுத்து வதற்காக நிறைய திட்டங் களைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன் . இதுபற்றி ஆலோசனைகளைப் பெறவே நான் அவரைச் சந்தித்தேன் . "

"தனது கட்சியில் சேரும் படி அத்வானி உங்களை அழைத்தாராமே . . . ? "

" உங்களைப் போன்று மக்கள் சேவை செய்ய விரும்பும் பெண்மணி எங்கள் பி . ஜே . பி -யில் சேர்ந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் ' என்று அத்வானி சொன்னது உண்மைதான் . "

Exclusive interview Vijaya shanti

" சரி . . . பி . ஜே . பி . பற்றி அத்வானியிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள் ? "

" உங்களைப் போன்ற தெளிவான அரசியல் கொள்கையுடைய நேர்மையான கட்சி ஆட்சிக்கு வந்தால் , அது நம் நாட்டுக்கு நன்மை கொடுக்கும் ' என்றேன் . இதனால் , நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்து விட்டேன் என்று அர்த்தம் இல்லை ! "

" மக்கள் சேவை , யுவசேனா . . . இதற்கெல்லாம் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் ? "

" அப்படியெல்லாம் யாரும் இல்லை பொதுவாக சினிமா மூலம் பிரபலம் ஆனவர்கள் ரிட்டயராகும் காலத்தில் அரசியலுக்கு வருவார்கள் . நான் அந்த ரகம் இல்லை . என்னுடைய லட்சியம் மிகவும் சிம்பிளானது!' விஜயசாந்தி நடிக்க வந்தாள் , போனாள் என்று இருக்க கூடாது ! தன்னைப் பிரபலமாக்கிய மக்களுக்கு பிரதிபலனாக அவள் ஏதாவது ஓர் உபகார செய்தாள் ' என்றுதான் வருங்காலம் என்னை பற்றிக் குறிப்பிட வேண்டும் " - விஜயசாந்தி மேடைப் பேச்சாளர் மாதிரி பேசினார் .

நமக்கு விடை கொடுத்து கைகூப்பி போதுகூட , அதில் அரசியல்வாதியின் ஸ்டைல் தெரிந்தது .

(30.11.1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)



from விகடன்

Comments