"சூர்யா என்னைவிட 5 வயசு பெரியவர்; ஆனா அவருக்கு நான் அம்மாவா நடிச்சேன்!"- ராஜஶ்ரீ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் `அமுதாவும் அன்னலட்சுமியும்'. இந்தத் தொடரின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் `கருத்தம்மா' ராஜஶ்ரீ. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நடிப்பிலிருந்து பிரேக் எடுத்திருந்தவர் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். கலகலப்பாகத் தன் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
கருத்தம்மா ராஜஶ்ரீ

என் குழந்தைக்காகதான் இவ்வளவு நாள் பிரேக்ல இருந்தேன். தொடர்ந்து எனக்கு போன் பண்ணி நீங்கதான் இந்த ரோல்ல நடிக்கணும்னு சீரியல் தரப்புல இருந்து கேட்டுகிட்டே இருந்தாங்க. நானும் ஏதேதோ காரணம் சொல்லி அவங்களைத் தவிர்த்துகிட்டே இருந்தேன். தொடர்ந்து அவங்க கேட்டதனால வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தேன். அவங்க என்னை பார்த்தப்போ மார்டன் டிரஸ்லதான் இருந்தேன். அவங்க இந்தக் கதையை சொல்லவும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. மேக்கப் எதுவும் இல்லாம வீட்ல எப்படி இயல்பா இருப்போமோ அப்படித்தான் இருந்தேன். இதே மாதிரியான லுக்ல நீங்க நடிச்சா போதும்னு சொன்னாங்க.

சினிமா இண்டஸ்ட்ரியைப் பொறுத்தவரைக்கும் ஒரு ஆர்ட்டிஸ்ட் மறைஞ்சிட்டாங்கன்னா மறைஞ்சிட்டாங்க தான்! ஆனா, என்னைத் தேடி நான் தான் நடிக்கணும்னு வர்ற வாய்ப்பை ஏன் வேண்டாம்னு சொல்லணும் டிரை பண்ணிப் பார்க்கலாம்னு தோணுச்சு. இந்தக் கதாபாத்திரமும் எனக்கு பிடிச்சிருந்ததால ஓகே சொல்லிட்டேன். நல்லதொரு குடும்பக் கதைதான் இந்த `அமுதாவும் அன்னலட்சுமியும்' என்றவரிடம் `நந்தா' படத்தில் சூர்யா அவர் மகனாக நடித்தது குறித்துக் கேட்டதும்,

கருத்தம்மா ராஜஶ்ரீ

சூர்யா இப்ப வரைக்குமே என் பெஸ்ட் ஃப்ரெண்ட். பாலா சாரை சமீபத்தில் சந்திச்சேன். அப்ப அவர்கிட்ட படம் பண்ணலாமாப்பான்னு கேட்டேன். அவரே ஷாக் ஆகிட்டார். நீ மறுபடி நடிக்கிறேன்னா நிச்சயம் பண்ணலாம்னு சொன்னார். வரப் போகும் படத்தில் அவருடன் நடிச்சாலும் நடிக்கலாம்! என ட்விஸ்ட் வைத்தார்.

சூர்யா என்னைவிட ஐந்து வயது பெரியவர். ஆனா, அவருக்கு அம்மாவாக நடிச்சேன். நடிக்கும்போது செட்ல நான் எப்பவாச்சும் அண்ணன்னு கூப்பிட்டா, அண்ணன்னு மட்டும் கூப்பிடாதேன்னு சொல்லுவார்.. இப்பக்கூட அண்ணன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது! என்றவர் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

அவற்றை காண லிங்கை கிளிக் செய்யவும்!



from விகடன்

Comments