கங்கனா ரணாவத்தின் Dhaakad படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. படத்தின் சாட்டிலைட் மற்றும் OTT உரிமையைப் பெறுவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்கிற தகவல் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Dhaakad படம் மே 20 திரையங்குகளில் வெளியானது. பாலிவுட் குயின் கங்கனா ரணாவத் லீட் ரோலில் நடித்திருந்தார். படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் பல திரையரங்குகளில் படம் திரையிடுவது ரத்தானது.
"பொதுவாகவே படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே அதன் சாட்டிலைட் மற்றும் OTT உரிமைகளை விற்றுவிடுவர். இந்தப் படத்தைப் பொறுத்த வரை படத்தின் ரிலீஸ்க்கு பிறகு நல்ல தொகைக்கு விற்கலாம் எனத் தயாரிப்பாளார்கள் காத்திருந்தனர். ஆனால் படம் மோசமான தோல்வியைச் சந்தித்தால் எந்த ப்ராட்காஸ்ட் நிறுவனமும் இதன் உரிமையைப் பெற முன்வரவில்லை." எனத் தெரிவிக்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தினர்.
மேலும் "Dhaakad படத்தின் திரையரங்க டிஸ்ட்ரிப்யூஷனை Zee Studios நிறுவனம் மேற்கொண்டது. இருப்பினும் OTT உரிமையை அவர்கள் பெறவில்லை. தயாரிப்பு தரப்பு அமேசான் பிரைம் OTT நிறுவனத்துக்கு படத்தை விற்க முயற்சி செய்து வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் என்ன நிலவரம் என்பது தெரியும்" என்கிறார்கள். 80-90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் வெறும் 3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் கவலை தெரிவிக்கிறார்கள்.
from விகடன்
Comments