யார் அந்த கான்ட்ராக்டர் நேசமணி? அவர் தலைல விழுந்த சுத்தியல் யாரோடது? அவரோட அண்ணே மயன் கிச்சிண மூர்த்தி கைது செய்யப்பட்டாரா? கோவாலுக்கு ஒண்ணு ஆகலயேனு ஒட்டு மொத்த இணையவாசிகளும் ஒரே படப்பிடிப்புல இருந்தாங்க. சுத்தியலும் கையுமா சுத்துற THORரே, ரெண்டு வாரம் தலைமறைவா சுத்திருக்காரு, முன் ஜாமின் கூட வாங்கிருக்கார்னா பாருங்க. சரி, யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணினு பாப்போம்.
கான்ட்ராக்டர் நேசமணி - ஒரு சிறுகுறிப்பு
கான்ட்ராக்டரான நேசமணி, அவரோட அண்ணே மயன் கிச்சிண மூர்த்தி, தலைமை உதவியாளர் கோவாலு, கூடுதல் தலைமை உதவியாளர் கொட்டாச்சு, இணை உதவியாளர் வேலப்பா உள்ளிட்டோரோட பெயிண்ட்டிங் கான்ட்ராக்ட் நிறுவனத்தை நடத்திட்டு வந்தார். அப்பதான் கிச்சிண மூர்த்தியோட நண்பர்கள் இரண்டு பேர (அரவிந்தன், சந்துரு), தன்னோட சித்தப்பா நேசமணிக்கிட்ட சம்பளமே இல்லாம அப்பரசென்ட்டா அதாவது ஏபிபிஏஆர்இஎன்டிஐஇஎஸ்ஸாசேத்து விடுறார். சரி நாமளும் பேலஸுக்குதான பெயின்ட் அடிக்கப் போறோம், அங்க திங்கிறதுக்கு தங்குறதுக்கு எல்லாம் ஃப்ரீதானேன்னு சித்தப்பா நேசமணியும் இந்த டீலிங்குக்கு ஒத்துக்கிட்டாரு.
தேவையில்லாத ஆணியும் பூமர் சித்தப்பாவும்
பேலஸ்ல ஆணி புடுங்குற நிகழ்ச்சிலதான் அந்த விபத்து நடந்தது. இல்ல கொலை முயற்சி நடந்தது. இப்டி எதுனாலும் வச்சுக்கலாம். 'நீ புடுங்குறது பூராமே தேவை இல்லாத ஆணிதான். போய் புடுங்கு போ'னு கிச்சிண மூர்த்தி கையில சுத்தியல்ச் கொடுத்து மாடிக்குப் போகச் சொல்ற நேசமணிக்கு தெரியல அடுத்து நடக்கப் போற சோக சம்பவம்.
தலைமை உதவியாளர் கோவாலுக்கிட்ட, 'தொடடா, கீழத்தொடடா தரையத் தொடடா. சாவடிக்கிறாய்ங்களே என்னய்ய'னு உத்தரவு போட்ட நேசமணி, அடுத்து சந்துருவை 'வேகமா தொடடா'ன்னு மிரட்டிட்டு இருந்தார். அப்பதான் தலையில 'சாவடிக்கிற' அந்தச் சுத்தியல் வந்து விழுந்துச்சு.
360 டிகிரில சுத்தி மயங்கி கீழ விழுந்தார் நம்ம நேசு.
சுத்தியலும் சில சந்தேகங்களும்
கிச்சிண மூர்த்திக்கும் சித்தப்பா நேசமணிக்கும் ஆரம்பத்துலருந்தே சண்டயாதான் போகும். 'எங்கண்ணே உன்னய பெத்ததுக்கு காக்கிலோ அரிசியைப் பெத்திருந்தாலும், பொங்கியாச்சும் சாப்ட்ருக்கலாம்'னு கிச்சிண மூர்த்தியை நேர்படவே சித்தப்பா நேசமணி திட்டுவார். ஆனா கிச்சிண மூர்த்தியோ, 'கிச்சானாலே இளிச்ச வாயன்தான'னு சோகமா போய்ருவார். அப்டிப்பட்ட கிச்சுண மூர்த்தி, இந்தக் கொலை முயற்சிய செஞ்சுருக்க மாட்டாருனு ஒருதரப்பும், 'பர்னிச்சர் மேல கைய வச்ச மொத்த டெட் பாடி நீதான்'னு சித்தப்பா சொன்னது, கிச்சிண மூர்த்தி மனசுல பசு மரத்து 'ஆணி' போல ஆழமா பதிஞ்சுருக்கலாம், அதனால சொந்த சித்தப்பாவயே கொலை பண்ண அவர் முயற்சி பண்ணிருக்கலாம்னு ஒரு தரப்பும் சொல்றாங்க. சுத்தி விழுந்து, 360 டிகிரில அவர் சுத்தி கீழ விழுந்தனால, நேசமணி சித்தப்பாவும் கிச்சிண மூர்த்தியும் '360' டிகிரி எதிரிகதான்னு ஒருதரப்பும் பேசுது.
''ஒரு லட்ச ரூபா கான்ட்ராக்டுடா அதுல மண்ணள்ளி போட்றாதீங்கடா'னு நேசமணி எவ்ளோ கெஞ்சுனாரு? அவர் தலையில சுத்தியல போட்டானே இந்த கிச்சிண மூர்த்தி பய'ன்னு நாலாவது விதமாவும் ஊருக்குள்ள பேசுக்கிட்டாங்க.
நேசமணிக்கான ஆதரவும் ட்விட்டர் ட்ரெண்டிங்கும்
என்னதான் இந்தச் சம்பவம் 2001ல நடந்தாலும், மூணு வருசத்துக்கு முன்ன வந்த ஒரு பேஸ்புக் போஸ்ட்னாலதான் உலகத்துக்கே இந்தச் சம்பவம் தெரிய வந்துச்சு. இது தொடர்பான சிசிடிவி புட்டேஜ்ஜும் வெளியாகி பெரும் பரபரப்பாச்சு.
கான்ட்ராக்டர் நேசமணிக்கு நீதி கேட்டு, சமந்தா போன்ற திரைக்கலைஞர்கள் தொடங்கி, ஹர்பஜன் மாதிரியான தமிழ்ப் புலவர்களும் குரல் கொடுத்தாங்க.
வழக்கும் விசாரணையும்
இது தொடர்பா கிச்சிண மூர்த்தி மேல வழக்கு பதிவு செஞ்ச 'சுத்தியல் தடுப்பு சுங்கத்துறை காவலர்கள்', தலைமை உதவியாளர் கோவாலு, கூடுதல் தலைமை உதவியாளர் கொட்டாச்சு, இணை உதவியாளர் வேலப்பா, சம்பளமே இல்லாம அப்பரசென்டா அதாவது ஏபிபிஏஆர்இஎன்டிஐஇஎஸ்ஸா சேர்ந்த அரவிந்தன், சந்துரு, அப்பறம் பேலஸ் மேனேஜர் சுந்தரேஸாகிட்ட எல்லாம் விசாரணை நடத்திருக்காங்க.
இந்த விசாரணையோட அறிக்கைய பொது மக்களோட பார்வைக்கு வைக்கணும்னு பலத்த கோரிக்கைகள் அந்த நேரத்துல வந்துச்சு.
இப்ப மூணு வருஷமாச்சு. அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படல. கான்ட்ராக்டர் நேசமணியோட உடல்நிலை எப்படி இருக்கு? நேசமணிக்கு கொரோனா வந்துச்சா? கிச்சண மூர்த்தி கைது செய்யப்பட்டாரா? அப்பரெண்டீஸான அரவிந்தன், சந்துருவுக்கு இந்தச் சம்பவத்துல தொடர்பிருக்கானு மக்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் இதுவரை விடை இல்ல. நாமளும் மறந்துட்டோம். மறதி தேசியவியாதினு கமலஹாசன் மொட்ட மாடில உக்காந்துக்கிட்டு சும்மாவா சார் சொன்னாரு?
from விகடன்
Comments