சட்டச்சிக்கலில் 'லாக்அப்': நடிகை கங்கனா ரணாவத்தின் ரியாலிட்டி ஷோ வுக்கு ஏற்பட்ட சிக்கல் இதுதான்!

சர்ச்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முதல் முறையாக ரியாலிட்டி ஷோ நடத்த ஒப்பந்தமாகி இருந்தார். 'லாக்அப்' என்ற அந்த ரியாலிட்டி ஷோ ஒடிடி தளங்களில் வெளியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி இம்மாத இறுதியில் ஒளிபரப்புவதாக இருந்தது. இருந்து தொடங்குவதாக இருந்தது. இதற்கான விளம்பரங்கள் அதிக அளவில் சமூக வலைதளத்தில் வெளி வந்து கொண்டிருந்தன. இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்து வழங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென கங்கனாவின் ரியாலிட்டி ஷோ திட்டமிட்டபடி இன்று தொடங்கப்படவில்லை. ஏக்தா கபூர் சனிக்கிழமை வெளியிட்ட லாக்அப் ரியாலிட்டி ஷோ விளம்பர அறிவிப்பில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என்ற விபரத்தை நீக்கிவிட்டார். அதாவது திட்டமிட்டபடி இன்று தொடங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது நிகழ்ச்சி சட்டச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஐடியா திருடப்பட்டதா?

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சனோபர் பாக் என்பவர் லாக்அப் நிகழ்ச்சி தொடர்பாக ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். எனது ஐடியாவை திருடி லாக்அப் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 2018ம் ஆண்டே இந்த நிகழ்ச்சி தொடர்பாக சிறை என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், எனது ஐடியா தொடர்பாக எண்டோமல் சைன் இந்தியாவின் அபிஷேக் என்பவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் சனோபர் கோர்ட்டில் தெரிவித்தார்.

கங்கனா ரணாவத்

இவ்வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்த போது சனோபர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த கோர்ட் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. அதோடு லாக்அப் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாலாஜி டெலிபிலிம், எண்டோமால் சைன் இந்தியா போன்றவற்றின் மீது போலீஸ் நிலையத்தில் சனோபர் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி இன்று லாக்அப் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. வழக்கு தொடர்ந்தவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்ட பிறகு ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



from விகடன்

Comments