நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சுற்றுலாப்பயணத்தில் இருக்கிறார். இது சமந்தாவின் மற்ற சுற்றுலாப் பயணங்களைப்போல் இல்லாமல் இந்த சுற்றுலாப் பயணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டிலும் பயிற்சி வகுப்புகளிலும் ஈடுபட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடந்த பனிச்சறுக்கு வகுப்புகளில் கலந்துகொண்ட சமந்தா தான் பயிற்சி எடுத்தக் கொண்ட காணொளியையும் அவர் தனது பனிச்சறுக்குப் பயிற்றுவிப்பாளரான 'கேட்' உடன் தான் இருக்கும் ஒரு மகிழ்ச்சியான புகைப்படத்தையும் தன் அனுபவங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Also Read: "என்னவனைக் கண்டுபிடித்தேன்!"- கேரள நண்பரைத் திருமணம் செய்த `நாகினி' சீரியல் கதாநாயகி மெளனி ராய்!
கடந்த மாதங்களில் சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் காணொளிகள் அத்தனையும் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. கிட்டத்தட்ட சமந்தா கடந்த இரண்டு மாதங்களாகவே சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கிலேயே உள்ளார். தொடர்ந்து தன் புகைப்படங்களையும் காணொளிகளையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வண்ணம் உள்ளார். அண்மையில் கூட சமந்தா சுவிட்சர்லாந்து பனியில் தனது தோழியான ஷுல்ப்பா ரெட்டியுடன் இருக்கும் புகைப்படமும் சமந்தா பனிச்சறுக்குகளில் விளையாடும் காணொளியும் வெளியாகி 1.5 மில்லியன்களில் ட்ரெண்டானது. அதைத் தொடர்ந்து தற்போது சமந்தா பனிச்சறுக்குப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி எடுக்கும்போது தான் கீழே விழுந்த காணொளியையும் அது குறித்தான அனுபவங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் “நான் சிறு குழந்தைகளுடன் என் பனிச்சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன். 100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் வகையில் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல்” என்று சமந்தா குறிப்பிட்டிருந்தார்.
from விகடன்
Comments