கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படம் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியானது. இப்படத்தின் பாடல் மற்றும் வசனங்களை சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் பிரபலங்களும் இமிடேட் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர், ரவீந்திர ஜடேஜா, போன்ற கிரிக்கெட் பிரபலங்களும் புஷ்பா படத்தின் வசனங்களையும் பாடல்களையும் இமிடேட் செய்து தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோவும் புஷ்பா படத்தின் 'Pushpa Walk' எனும் அல்லு அர்ஜுனின் நடனத்தை கிரிக்கெட் மைதானத்திலேயே ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The Champion, @DJBravo47 channels his inner after sending Mahidul Islam Ankon back to the pavilion!
— FanCode (@FanCode) January 25, 2022
Catch the West Indian legend in relentless #BBPL2022 action for just ₹5, LIVE on #FanCode https://t.co/OLCsbLuBGA#BPLonFanCode @alluarjun pic.twitter.com/kVlAlvI2x3
தற்போது (BPL) எனும் பங்காளதேஹ் பிரிமியர் லீக் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில் கடந்த ஜனவரி 25 -ல் நடைபெற்ற comilla victoria மற்றும் Fortune Borishal இடையிலான போட்டியில் டுவைன் பிராவோ இடம்பெற்ற Fortune Borishal அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் டுவைன் பிராவோ தனது அசத்தலான பந்து வீச்சை வீசத் தவறவில்லை. டுவைன் பிராவோ இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது மஹீதுலின் விக்கெட்டை வீழ்த்தியபோது அதனைக் கொண்டாடும் வகையில் 'Pushpa walk' என்று ட்ரெண்டாகும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜுனின் நடனத்தை கிரிக்கெட் மைதானத்திலே ஆடினார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் ரசித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அதேபோல் அவரின் இன்ஸ்டாகிராமில் 'Going with the trend ' என பகிரப்பட்ட 'Pushpa walk' கை இமிடேட் செய்த மற்றோரு காணொளியும் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் நெடுநாளாக விளையாடி தன் அசத்தலான பந்து வீச்சால் அபார வெற்றிகளை குவித்த டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிலிருந்து ஒய்வு பெரும் அறிவிப்பை இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
from விகடன்
Comments