"பிரச்னைகள் உருவாகியிருக்கலாம்" சமந்தா - நாக சைதன்யா பிரிவு குறித்து நாகார்ஜுனா!

"சமந்தா தான் முதலில் விவாகரத்து கோரியது" என நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜுனா பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். 2021 அக்டோபரில் சமந்தாவும் நாகசைதன்யாவும் தங்கள் இணைய பக்கத்தில் இருவரும் பிரிய உள்ள முடிவை அறிவித்தனர். அதற்கான காரணம் குறித்து பெரிதாக இருவரும் பேசாத நிலையில் நாகர்ஜுனா தற்போது அளித்துள்ள பேட்டியில் அந்த முடிவை முதலில் எடுத்தது சமந்தா என்றும் அதன் பிறகு நாக சைதன்யா ஒத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். "நாக சைதன்யா முடிவை ஒத்துக் கொண்டார். ஆனால் அவர் கவலை பட்டதெல்லாம் என்னை பற்றி தான். நான் என்ன நினைப்பேன். குடும்பத்தின் பெயர் என்னவாகும் என்பதைப் பற்றி, என் கவலையைப் போக்க அவன் என்னை ஆறுதல்படுத்தினான். இருவரும் நான்கு வருடங்களாக ஒன்றாக தான் இருந்தார்கள். நெருக்கமாக இருந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் எப்படி வந்தார்கள் என எனக்கு தெரியவில்லை. 2021 நியூ இயர் கூட ஒன்றாக தான் கொண்டாடினார்கள். அதற்கு பிறகு தான் பிரச்சனைகள் உருவாகியிருக்கலாம்" என்கிறார் நாகார்ஜுனா.

சமந்தா - நாக சைதன்யா

சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியாக உள்ள Bangarraju படத்திற்கான ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் நாக சைதன்யா, "பிரிவது என்பது சரியானதுதான். இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருப்பாரானால் எனக்கும் மகிழ்ச்சி தான். இது போன்ற சூழ்நிலையில் சிறந்த முடிவு அது தான்" எனக் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.



from விகடன்

Comments