விஜய் டிவியில் சமீபத்தில் புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் 'வைதேகி காத்திருந்தாள்'. மாலை 6 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் பிரஜின் ஹீரோவாகவும் சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர்.
இந்நிலையில் ஒளிபரப்பாகத் தொடங்கி ஒரு மாத காலமே ஆகியிருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து ஹீரோ பிரஜின் திடீரென வெளியேறி இருக்கிறார்.
என்ன பிரச்னை? பிரஜினிடமே பேசினோம்.
"ஆமாங்க, சீரியல்ல இருந்து நான் வெளியேறிட்டேன். அடுத்தடுத்து சில படங்கள் இருக்கு. இந்தப் படங்கள் முன்னாடியே கமிட் ஆனதுதான்னாலும் சினிமா, சீரியல் ரெண்டையும் பேலன்ஸ் செய்துடலாம்னு நினைச்சுதான் சீரியல்ல கமிட் ஆனேன். ஆனா இப்ப ஷூட்டிங் ஷெட்யூலைச் சமாளிக்க முடியலை. சீரியலுக்கு தேதி கொடுக்கறதுல சிக்கல் வந்தது. அதனாலதான் வேற வழி இல்லாம யூனிட்ல விஷயத்தை அப்படியே சொல்லிட்டு சுமூகமா தொடர்ல இருந்து வெளியேறிட்டேன். நல்ல புராஜெக்ட். கூட ஒர்க் பண்ணினவங்க எல்லாருமே நல்லா பழகினாங்க. ஜாலியான யூனிட். ஆனாலும் என்னால தொடர முடியாமப் போச்சுன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு’’ என்கிறார் பிரஜின்.
from விகடன்
Comments