சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரியானவர், ஸ்ருதி சண்முகப்பிரியா. பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும்போது கிடைத்த வாய்ப்பினை பற்றிக் கொண்டு தொடர்ந்து பல தொடர்களில் நடித்தார். 'பொம்முகுட்டி அம்மாவுக்கு', 'பாரதி கண்ணம்மா' போன்ற தொடர்களில் நடித்திருந்தார். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
கோயம்புத்தூரை சேர்ந்தவர், ஸ்ருதி. இவருக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி பூச்சூடல் விழா நடைபெற்றிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி பதிவிட்டிருக்கிறார். அதில், இது எங்களுடைய பூச்சூடல் விழா. சீக்கிரமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை அறிவிக்கிறோம் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருடைய பதிவிற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். பாசிட்டிவ், நெகட்டிவ் என சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது நடிப்பிற்கு குட்டி பிரேக் எடுத்திருக்கிறார்.
மல்டி டாஸ்கிங்கில் ஒர்க் பண்றது ஸ்ருதிக்கு பிடித்தமான விஷயம். சீரியலில் நடிக்கும்போதே, பிரெஞ்ச் பாடப்பிரிவில் பி1 படித்துக் கொண்டிருந்தார். பிரெஞ்ச் மொழியில் பி1 முடித்திருந்தாலே கல்லூரியில் பிரெஞ்ச் பாடப்பிரிவு விரிவுரையாளராக முடியும். அதுதவிர, பிரெஞ்ச் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குரூப்பிலும் ஸ்ருதி இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துகள் ஸ்ருதி - அரவிந்த்!
from விகடன்
Comments