பிக் பாஸ் - ல நான் ஜெயிச்சா எனக்கு மிகப் பெரிய வாயப்பாக இருக்கும் என ராஜூ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே கூறிவருகிறார். அவரின் மனைவி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும், "இனி வாய்ப்புக்காக அலைய வேண்டியிருக்காதுல" எனக் கூறியிருந்தார். 'பிக்பாஸ்' வீட்டில் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ராஜூவின் ஆரம்ப பாலமட் அவரது பின்னணி குறித்து 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் இயக்குனர் சிவா அரவிந்திடம் பேசினோம்.
Also Read: பிக் பாஸ் 86 : "எல்லாத்தையும் ஆரம்பிச்சவனே நீதான்"அமீரிடம் கொதித்த பாவனி; குட்டையைக் குழப்பிய தாமரை!
"பிக்பாஸ் வீட்டுக்குள்ள நீங்க எல்லாரும் ராஜூவை எப்படி பார்க்குறீங்களோ நிஜத்திலும் அவன் அப்படித்தான். எப்பவும் கலகலன்னு டைமிங் காமெடி பண்ணிட்டு இருப்பான். 'பிக்பாஸ்' வீட்டுக்கு போகணும்னு அவனுக்கு ரொம்ப நாள் ஆசை. அந்த ஆசை இப்போ நிறைவேறிடுச்சு. அவன் இத்தனை நாள் அந்த வீட்டுக்குள்ள தாக்குப் பிடிப்பான்னு நான் நினைக்கவே இல்லை. ஏன்னா, சண்டைன்னு வந்தா ஒதுங்குற ஆளு அவன். அதே மாதிரி, சண்டை போட்டாலும் அதை அந்த நிமிடத்திலேயே மறந்திடுவான்.
சின்ன வயசில இருந்தே ஹாஸ்டலில் தங்கி தான் படிச்சிருக்கான். அவனுக்கு எல்லாமே ஃப்ரெண்ட்ஸ்... ஃப்ரெண்ட்ஸ்... தான். ஊரிலிருந்து சென்னைக்கு வந்தப்போகூட இன்னொருத்தர் வீட்டில்தான் ராஜூ இருந்திருக்கான். பல தடவை வாய்ப்புக்காக பலரிடம் கேட்டிருக்கான். ஆனா, அவனுக்கு கிடைச்ச வாய்ப்பில் அவனால எவ்வளவு சிறப்பா பண்ண முடியுமோ அதை தவற விடாம பண்ணியிருக்கான்.
ராஜூ அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி வளர்த்தான். அந்த நாய் பேரு ஜில்லு. அதுக்கு மூணு பிரசவம் அவனே பார்த்திருக்கிறான். செல்லப்பிராணிகள் மேலேயே இந்த அளவுக்கு அன்பு வெச்சிருக்கான்னா அவனை சுற்றி உள்ளவங்களை எந்த அளவுக்கு நேசிப்பான்னு புரிஞ்சிக்கோங்க. அவன்கிட்ட பழகிற எல்லார்கிட்டேயும் ரொம்பவே அன்பா இருப்பான்.
எல்லாரையும் சிரிக்க வைக்கிறது அவனுடைய இயல்பு. ராஜூவோட எதிரிகள்கூட அவன் நகைச்சுவைக்கு சிரிக்காம இருக்க மாட்டாங்க. எனக்குத் தெரிஞ்சு எதிரியையும் ரசிக்க வைக்கத் தெரிஞ்சவன் அவன் மட்டும்தான்!
என்னை பொறுத்தவரை ராஜூ வெற்றி பெறணும்னு ஆசைப்படுறேன். அவனுக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை அவன் சரியா பயன்படுத்திக்கிட்டான்னு நம்புறேன்' என்றார்.
from விகடன்
Comments