சினிமா டிக்கெட்களை அரசே ஆன்லைனில் விற்பனை செய்யப்போகிறதா... ஆந்திர அரசின் முடிவு சரியானதா?

ஆந்திர மாநில அரசு திரையரங்குக் கட்டணங்களை சமீபத்தில் ஒழுங்குபடுத்தியது. கிராமம், நகரங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.

ஆந்திர சட்டமன்றத்தில் இந்தாண்டு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் கடந்த நவம்பர் முதல் அமுலில் உள்ளது. அதில் எந்தவொரு திரையரங்கமும் சினிமா டிக்கெட்டும் அரசின் ஆன்லைன் மூலமே விற்க வேண்டும் என்றும் நேரடியாக விற்கக்கூடாது என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சினிமா டிக்கெட்களை ஆந்திர பிரதேச அரசே விற்பனை செய்யவிருக்கிறது. ஆந்திர அரசின் திரைப்பட வளர்ச்சி கழகம் மூலம் புதிதாக ஆன்லைன் வசதியும் இதற்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

RRR

ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் அரசு குறிப்பிட்டுள்ள விலையை மட்டுமே செலுத்தினால் போதும். எக்ஸ்ட்ராவாக ஜி.எஸ்.டி.யோ அல்லது கூடுதல் கட்டணங்களோ செலுத்த தேவையில்லை. இத்திட்டம் ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான 'RRR' படத்திலிருந்து அமலுக்கு வருகிறது.

ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலையை மாநில அரசே நிர்ணயித்து ஆன்லைனில் விற்பதற்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த சில நாள்களுக்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்திருந்தர். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுபரிசீலனை செய்யவேண்டுமென சிரஞ்சீவி கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஜெகன் மோகன் ரெட்டி

அதேபோல், ஆந்திர உயர்நீதிமன்றம், அரசின் இந்த முடிவுக்கு எதிராக இருந்தாலும், ஜெகன் மோகன் அரசு, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 19-ம் தேதி அன்று GO (No.142) ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இப்படி அரசே சினிமா டிக்கெட்களை விற்பனை செய்வதால், டிக்கெட் கட்டணம் சீரமைக்கப்படுமா? இதேபோல் தமிழகத்திலும் செய்யலாமா? இதிலுள்ள நிறை, குறை என்ன என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.


from விகடன்

Comments