EXCLUSIVE : இயக்குநர்கள் ஷங்கர் - கார்த்திக் சுப்புராஜ் மீது கதை திருட்டு சர்ச்சை... நடந்தது என்ன?

'எந்திரன்' கதை திருட்டு விவகாரத்துக்குப் பின் மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். தெலுங்கில் தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார் ஷங்கர். இதன் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஏற்கெனவே ஷங்கர் 'இந்தியன் - 2', இந்தியில் 'அந்நியன்' ரீமேக் பட வேலைகளில் இருந்து வருவதால், ராம்சரண் படத்துக்கான கதையை கார்த்திக் சுப்புராஜை எழுத வைத்திருக்கிறார் ஷங்கர்.

ஆனால், இந்தக் கதை தன்னுடையது என செல்லமுத்து என்ற உதவி இயக்குநர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜின் முன்னாள் உதவி இயக்குநர் என்கிறார்கள்.

ராம் சரண், ஷங்கர், தயாரிப்பாளர் 'தில்' ராஜு

இதுகுறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினரிடம் பேசினேன். அங்கே பொறுப்பில் இருக்கும் பலரும், ''அது குறித்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை'' என பேச மறுத்துவிட்டனர். பொதுசெயலாளரான மனோஜ்குமாரிடம் பேசினால், ''இருதரப்பில் விளக்கம் கேட்டிருக்கிறோம். இருவரும் விளக்கம் சொன்ன பிறகே, மேற்கொண்டு தகவல் சொல்லமுடியும்" என சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

மேற்கொண்டு தகவல் கேட்க, சங்கத்தின் தலைவரான கே.பாக்யராஜை தொடர்பு கொண்டேன். ''நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்'' என்ற பாடல் காலர் டியூனில் ஒலிக்க ஆரம்பித்து ''அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்'' என்ற வரிகளோடு நிறைவடைகிறது.



from விகடன்

Comments