முதலில் வந்த 'லூசுப்பெண்ணே' சிம்பு, நள்ளிரவில் இணைந்த 'ரவுடிபேபி' தனுஷ்... யுவன் பார்ட்டி ஹைலைட்ஸ்!

தமிழ் சினிமா உலகில் இருந்து பலரும் கலந்துகொண்டு வாழ்த்திய யுவன் ஷங்கர் ராஜாவின் 42-வது பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் இங்கே!

* யுவன் ஷங்கர் ராஜாவுக்கேத் தெரியாமல் அவர் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் பார்ட்டி இது. ‘’பிரைவேட் டெரஸ்ல டின்னர் போலாம்'’ என சொல்லி மெட்ராஸ் ஹவுஸுக்கு அழைத்துவந்திருக்கிறார் ஸாஃப்ரூன் நிசா. “மொத்தம் 5 பேர்தான் வருவாங்க” என சொல்லி பெரும் நட்புக்கூட்டத்தையே கூட்டி பார்ட்டியை அசத்தியிருந்தார் ஸாஃப்ரூன்.

* சென்னையின் பிரபலமான ‘மொட்டை மாடி மியுசிக்’ பத்ரியின் பேண்டு யுவனின் பாடல்களை வாசித்து பாட அரங்கமே உடன் சேர்ந்து பாடியது.

* பார்ட்டிக்கு முதல் ஆளாக வந்தவர் சிம்பு. ‘’நாளைக்கு ஷூட்டிங் இருக்கு'’ என முதலில் மேடையேறி யுவனை வாழ்த்திவிட்டு ‘’லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே’’ பாடலை பாடிவிட்டுக் கிளம்பினார் சிம்பு.

* இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவி மீனாட்சி மற்றும் மகள் தீ-யுடன் வந்திருந்தார். இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, தரண்குமார் ஆகியோரும் வந்திருந்தனர்.

யுவன் - சிம்பு
யுவன் - அசோக் செல்வன்
யுவன் - வைபவ்
தனுஷ் - அறிவு - தீ

* இயக்குநர்கள் விஷ்ணு வர்தன், அமீர், ராம், அஹ்மத், இளன், பிரதீப், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, சுரேஷ் காமாட்சி, சிவி குமார், சுதன் ஆகியோரும் வந்திருந்தனர். கதாநாயகர்களில் ஆர்யா, அசோக் செல்வன், வைபவ், மெட்ரோ சிரிஷ், கதாநாயகிகளில் சுனைனா, ரைசா வில்சன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

* நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இருந்தது ராப்பர் அறிவு யுவனுக்காகவே பிரத்யேகமாக எழுதி காக்கா பாலசந்தருடன் பாடிய கானா. அதை தொடர்ந்து ‘King YuVan’ என்று ''நீ சிரிக்கின்ற போதிலும், நீ அழுகின்ற போதிலும் உன் வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்... I WILL BE THERE FOR YOU... I WILL BE THERE FOR YOU'' என்றொரு பாடலையும் பாடி அரங்கத்தையே அதிரவைத்தார் அறிவு.


* வெங்கட்பிரபு, பிரேம்ஜி, கார்த்திக் ராஜா பவதாரணி, பாஸ்கர் என உடன்பிறப்புகள் அனைவரும் கேக் கட்டிங்கில் பங்கேற்று சிறப்பு செய்தனர்.


* நிகழ்ச்சியின் ஹைலைட்களில் முக்கியமானது மிர்ச்சி சிவா யுவன் - கார்த்திக் ராஜா பற்றி சொன்ன ஒரு குட்டிக் கதை.


* நள்ளிரவில் பார்ட்டிக்குள் நுழைந்த ‘பொயட்டு’ தனுஷ், தீ மற்றும் யுவனுடன் சேர்ந்து ''ரவுடி பேபி'' பாடல் பாடி முடித்ததோடு அறிவையும், தீயையும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்து மறக்காமல் அதை ட்விட்டரிலும் தட்டிவிட்டார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்!


from விகடன்

Comments