''அழகு' சீரியலில் நடிகை ரேவதியின் மகளாக நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் சஹானா ஷெட்டி. கொரோனா தொடங்குவதற்கு முன் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். என்ன நடந்ததோ சில மாதங்கள் கழித்து மறுபடியும் அதே சீரியலுக்குள் வந்தார். பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த சீரியலையே நிறுத்தி விட்டார்கள்.
இதனால் தெலுங்கு சினிமா பக்கம் போய் அங்கு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சஹானாவுக்கு சத்தம் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆடி பிறப்பதற்கு முந்தைய நாள் சென்னையில் கோயில் ஒன்றில் வைத்து திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.
வாழ்த்துச் சொல்லத் தொடர்பு கொண்டால், அவரது எண் நாட் ரீச்சபிள். அவரது அம்மாவிடம் பேசினேன்.
''டார்ஜிலிங், சிம்லா பக்கம் ஹனிமூனுக்காகப் போயிருக்காங்க. ஆடி பிறக்கறதுக்கு முன்னாடி கல்யாணம் நடத்த வேண்டியிருந்ததால அவசர அவசரமா யாருக்கும் சொல்ல முடியலை. இந்த கல்யாணம் நாங்களா பார்த்து நடத்தி வச்ச அரேஞ்டு மேரேஜ்தான்.
மாப்பிள்ளை பேர் அபிஷேக். சொந்த ஊர் புதுச்சேரி. டாக்டரா இருக்கார். முதல்ல அவங்க வீட்டுல வச்சு நிச்சயதார்த்தம் நடந்தது. கல்யாணம் சிம்பிளா முடிஞ்சிட்டதால வரவேற்பை சிறப்பா செய்யலாம்னு இருக்கோம். சென்னை வெட்டுவாங்கேனியில ஆகஸ்ட் 14-ம் தேதி திருமண வரவேற்பு நடக்க இருக்கு'' என்றார்.
வாழ்த்துகள் சஹானா & அபிஷேக்!
from விகடன்
Comments