எம்.ஆர்.ராதா - தமிழ் சினிமாவின் தனித்த குரல். கலைகளையே கலகங்களாகவும் கலகங்களையே கலைகளாகவும் மாற்றிய கலகக்கலைஞன். பெரியாரின் போர்வாளாய், சமூக அக்கறை கொண்ட கலைஞனாய், யாருக்கும் அஞ்சாத துணிச்சல்காரராய், வெளிப்படையான அதிரடிக்காரராய் வாழ்ந்தவர் எம்.ஆர்.ராதா.
125 படங்களுக்கு மேல் நடித்தும் ஏன் எம்.ஆர்.ராதா தன் சினிமா வாழ்க்கையை 'ரிட்டயர்ட் லைப்' என்று குறிப்பிட்டார்? தமிழ் சினிமாக்களில் அவரின் தனித்துவம் என்ன? நாடகங்களில் அவர் செய்த கலகங்கள், பெரியாருக்கும் எம்.ஆர்.ராதாவுக்குமான உறவு, அண்ணாவிடமே வெளிப்பட்ட அவர் தைரியம் என்று சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி படப்பிடிப்புக்கு எம்.ஆர்.ராதா கொண்டுவந்தது பலரும் பகிரும் செய்தி. எம்.ஆர்.ராதா ஏன் அப்படி செய்தார்? சிறைவாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைச் சுடுவதற்கு ஏன் துப்பாக்கியுடன் போனார், 'தூக்கில்போட சட்டம் கொண்டுவருவேன்' என்று யாரைச் சொன்னார் - இப்படி பல சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்கிறது இந்த வீடியோ.
from விகடன்
Comments