ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்! பிக்பாஸ் மாடல்களையும் ஆபாச பட ஷூட்டிங்கிற்காக அணுகினாரா?

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆபாச படங்களைத் தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது கூட்டாளி ரேயான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ் குந்த்ராவிடம் போலீஸார் இரண்டு முறை கோர்ட் அனுமதி பெற்று தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். அவரது போலீஸ் காவல் 27ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ராஜ் குந்த்ராவும் அவரது கூட்டாளி ரேயானும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் தங்களது காவலில் ஒப்படைக்கவேண்டும் என்று குற்றப்பிரிவு போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

ராஜ் குந்த்ரா

Also Read: ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தில் ரகசிய கப்போர்டு... எதிர் சாட்சிகளாக மாறிய அவரின் நான்கு ஊழியர்கள்!

குந்த்ராவின் வீட்டில் இருந்து ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் அது குறித்து விசாரிக்கவேண்டும் என்றும், ராஜ்குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டியின் கூட்டு வங்கிக்கணக்கில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, இது குறித்தும் விசாரிக்கப்படவேண்டியிருப்பதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

Also Read: Mimi: வாடகைத் தாயின் சிக்கல்களும், உணர்வுகளும்... ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எப்படியிருக்கிறது மிமி?!

ஆனால், ராஜ் குந்த்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போந்தா, "ஏற்கெனவே இதற்கு முன்பு இரண்டு முறை போலீஸ் காவல் கேட்கும்போது தெரிவித்த அதே காரணத்தை கூறியே மீண்டும் போலீஸ் காவல் கேட்கின்றனர். எனவே மீண்டும் போலீஸ் காவல் வழங்கினால் அது தவறான முன்னுதாரனமாகிவிடும்" என்று தெரிவித்தார்.

பிக்பாஸ் சகாரிகா சுமன்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராஜ் குந்த்ராவையும், ரேயானையும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. மற்றொரு புறம் ராஜ் குந்த்ரா தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறி, ஜாமீன் வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பின்னர் அதன் மீதான விசாரணை புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே ராஜ்குந்த்ராவின் நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாடல்களையும் ஆபாச படங்களில் நடிக்க வைக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாடல் சகாரிகா சுமன், ராஜ் குந்த்ராவிற்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். பிக்பாஸில் பங்கேற்ற மாடல்களை இதற்காக அணுகியதாகவும், ஆனால் அவர் 5 லட்சம் கேட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக சகாரிகா தெரிவித்துள்ளார்.



from விகடன்

Comments