விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட்டால் கிடைத்த பிரதமர் பதவி

ஒரு நாட்டையே ஆளும் அளவுக்கு கிரிக்கெட் வீரர்களால் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான்.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தில் 1952-ம் ஆண்டு பிறந்தவர் இம்ரான் கான். இவரது அப்பா ஒரு பொறியாளராக இருந்ததால், வசதியான சூழலில் வளர்ந்தார். தனது 9-வது வயதில், ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று இம்ரான் கான் விரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தில் சேர்ந்த அவர், தனது 16-வது வயது முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார். 1971-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த அவர், தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமைகளால், அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments