நடிகர் ஷாருக்கான் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது வழக்கம். அப்படி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்களுடன் 15 நிமிடங்கள் உரையாடினார். அந்த 15 நிமிட உரையாடலில் அவர் என்னென்ன கேள்விகளுக்கு பதில் சொன்னார் என்பதை பார்க்கலாம்.
உங்களுடைய அடுத்தப் படம் எப்போது வெளியாகும் ?
''இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் கொஞ்சம் பொறுமை காத்து படங்களை வெளியிடுவதுதான் விவேகமானது என நினைக்கிறேன்.''
விஜய் புகைப்படத்தை பதிவிட்டு அவரைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு...
''வெரி கூல்''
உங்களுடைய 29 ஆண்டுகள் பயணத்தில் உங்களை ஈர்த்த விஷயம் எது ?
''ஈர்க்கவில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் சிறப்பாகச் செய்யும் வேலையை செய்யாத அனைவருக்கும் அதை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்று தெரியும்.''
உங்களுடைய ஃபிட்னஸ் எப்படி இருக்கிறது ?
''ஜான் ஆப்ரகாமை போல இல்லையென்றாலும் நன்றாக இருக்கிறது.''
''ராஜ்குமார் ஹிரானியுடன் படம் பண்றீங்களா?''
''அவருக்கு போன் செய்து வேண்டுகோள் விடுக்கப்போகிறேன். அவர் மிகவும் லேட்டாகத் தூங்குகிறார்.''
''2020 உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது?''
''வேலை செய்த நேரம் மிகவும் குறைவு. ஆனால், குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது.''
''லாக்டெளனில் படிக்க எனக்கு சில புத்தகங்களை பரிந்துரையுங்கள்!''
''ஹாரி பாட்டர் சீரிஸ் புத்தகங்களை மீண்டும் படியுங்கள்.''
''உங்களுடைய வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?''
''மறுக்கட்டமைப்பில் இருக்கிறேன்.''
from விகடன்
Comments