"எந்த கேரக்டரா இருந்தாலும் ஓகே சொல்ல இது மட்டும்தான் காரணம்!''- வில்லி நடிகை ஜீவிதா

சன் டிவி-யின் 'திருமகள்' மெகா தொடரில் வில்லி ஆனந்தவல்லியாக அதகளம் செய்பவர் ஜீவிதா. இதற்கு முன் 'ஆபீஸ்’, 'தேவதை' 'பாசமலர்' சீரியல்களில் கவனம் ஈர்த்தவர். 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராகவும் புன்னகைத்தவர் ஜீவிதா. அவரிடம் பேசினேன்.

"வாழ்க்கையில பல சோதனைகள், சிக்கல்களை கடந்துதான் சென்னை வந்தேன். சின்ன வயசுல இருந்து டான்ஸ்ல ஆர்வம். இங்க வந்ததும் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கிற ஆசை வந்துடுச்சு. ஆனா, நடக்கல. ஏ.வி.எம் ஸ்டுடியோ போகணும். அங்கே ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கணும்னு விரும்பினேன். 'மனதில் உறுதி வேண்டும்' சீரியலோட ஷூட் போயிட்டிருந்தது.

ஜீவிதா

உடனே ஊருக்கு போனைப் போட்டு, அன்னைக்கு நைட்டே என் துணிமணிகளை அனுப்பி வைக்கச் சொல்லிட்டேன். 'மனதில் உறுதி வேண்டும்'ல நடிச்சேன். நல்ல பெயர் கிடைச்சது. அடுத்தும் அவங்களோட 'வைராக்கியம்'ல நடிச்சேன். என்னோட மூணாவது சிரீயல்தான் விஜய் டிவி-ல வந்த 'ஆபீஸ்'. சன்.டி.வியோட 'தேவதை'யில் செகண்ட் ஹீரோயினானேன். 'பாசமலர்', 'நிலா' தவிர ஜீ தமிழின் 'எங்க வீட்டுப்பெண்', 'சிவரகசியம்'னு நிறைய நடிச்சேன்.

பகல்ல டெலிகாஸ்ட் ஆகுற சீரியல்களை விட, நைட்ல ஒளிபரப்பாகுற சீரியல்கள்ல நடிச்சாதான் எல்லார்கிட்டேயும் ரீச் ஆக முடியும். நம்மளையும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நினைக்கறாங்க. இப்ப 'திருமகள்' பண்ணிட்டிருக்கேன்.

Also Read: மகன் இறந்த இரண்டே வாரத்தில் கணவரும் கொரோனாவால் இறப்பு... நடிகை கவிதாவைத் தொடரும் சோகம்!

'ஆபீஸ்' சீரியல்ல வில்லி சௌந்தர்யாவா நடிச்சது செமையா ரீச் ஆச்சு. அந்த கேரக்டரை அந்த டைம்ல திட்டாதவங்களே கிடையாது. வெளியே தலைகாட்டினா அடிச்சிடுவாங்களோனு பயந்ததும் உண்டு. அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுனு எனக்கு புரிய வச்சு, பேலன்ஸ் காட்சிகள்லேயும் என்னை நடிக்க வச்சாங்க. 'தேவதை'யில செகண்ட் லீட் பண்ணும்போது சந்தோஷமானேன். ஆனா, வில்லி கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல்லானதுனு எனக்கு புரிஞ்சுக்கவே மூணு வருஷம் தேவைப்பட்டுச்சு. இப்ப 'திருமகள்' வில்லியா நடிக்கறதுல கெத்தாவும் இருக்கு.

ஜீவிதா

சீரியலையும் ரியல் லைஃப்பையுமே பிரிச்சு பார்க்க தெரியாம ஆடியன்ஸ் இருந்த காலங்கள் இப்ப இல்ல. இப்ப ஐம்பது சதவிகித மக்களுக்கு இது ஷூட்டிங்தான், நடிப்புதான் புரியுது. எங்களுக்கும் யதார்த்தம் தெரியுது. நாலு நாள்களுக்கு மட்டும் நடிக்கற ரோல் கிடைச்சா கூட, வீட்டு வாடகை கட்ட உதவுமேனு எண்ணத்துல கமிட் ஆகிடுறேன். ஏன்னா, நடிப்பை மட்டுமே நம்பி இருக்கோம்.

'கடைக்குட்டி சிங்கம்' அடுத்து ஹரி சார் இயக்கத்துல அருண் விஜய் நடிக்கும் படத்துல அண்ணி கேரக்டர் பண்ணியிருக்கேன். ஒருநாள் ஷூட்டுக்குப் போனோம். லாக்டெளன் வந்துடுச்சு. அடுத்த ஷெட்யூலுக்கு வெயிட்டிங். நான் நடிச்சு முடிச்சு, வெளியாகாமல் இன்னும் மூணு படங்கள் லிஸ்ட்ல இருக்கு" எனப் புன்னகைக்கிறார் ஜீவிதா.



from விகடன்

Comments