கொரோனா காரணமாக 'அண்ணாத்த' ஷூட்டிங் தொடர்ந்து பல தடங்கல்களைச் சந்தித்தது. கடந்த டிசம்பரில் மீண்டும் தொடங்கிய ஷூட்டிங் ரஜினியின் உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2021 தீபாவளிக்குப் படத்தை எப்படியும் ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சன் டிவி நிர்வாகம், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஐதராபாத்தில் மீண்டும் ஷூட்டிங்கைத் தொடங்கியது.
ரஜினியும் ஐதராபாத் போய் இறங்கிவிட்டார். ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இடைவெளி இல்லாமல் 'அண்ணாத்த' ஷூட்டிங் நடந்துவருகிறது. இதுதொடர்பாக யூனிட்டில் சிலரிடம் பேசினோம்.
"இன்னும் மூன்று வாரத்துக்குள் படத்தை முடித்துவிட வேண்டுமென சன் நிர்வாகம் சொல்லிவிட்டது. லாக்டெளன் வந்துவிட்டால் மறுபடியும் ஒன்று கூடுவது கடினம் என யூனிட் உணர்ந்துவிட்டது. நிலைமையை உணர்ந்து ரிகர்சல் நன்றாகப் பார்த்து முதல் டேக்கிலேயே ஓகே சொல்லும் படி நடிக்கச் செய்கிறார்கள்.
ரஜினிகாந்தை யூனிட்டில் யாரும் தொட்டுப் பேசவோ, அவரோடு தனித்து உரையாடவோ அனுமதி இல்லை. முடிந்த மட்டும் அவரைத் தனியாக வைத்துப் பாதுகாக்கிறார்கள். இந்த இரண்டு வாரமும் எடுக்கிற எல்லா காட்சிகளிலும் ரஜினியுடனான காம்பினேஷன் காட்சிகள் உண்டு. அதனால் இந்த ஏற்பாடு. ரஜினிக்கு அவித்த காய்கறிகள், மிகவும் கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். காலை மாலை இரு வேளையும் இட்லிதான். மதியம் மட்டும் கொஞ்சமாக அரிசி சாதம். அடுத்த வாரத்தில் ரஜினி மீண்டும் சென்னை திரும்பிவிடுவார்" என்றார்கள்.
from விகடன்
Comments