கிரிக்கெட் உலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டி, எக்காலத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேன் என பெயர் பெற்றவரான டான் பிராட்மேன் காலமான தினம் இன்று (பிப்ரவரி 25). 2001-ம் ஆண்டில் காலமான அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.
டான் பிராட்மேனுக்கு குடிப்பழக்கம் கிடையாது. மற்றவர்கள் குடிப்பதையும் விரும்ப மாட்டார். ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு அக்காலத்தில் செல்வந்தர்கள் பணத்தை பரிசாக வழங்குவார்கள். பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரிசு வாங்கும் வீரர், தன் சகாக்களுக்கு மது வாங்கிக் கொடுப்பார். ஆனால் பிராட்மேன், யாருக்கும் மது வாங்கிக் கொடுத்ததில்லை. 52 டெஸ்ட் போட்டிகளில் 80 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்துள்ள பிராட்மேன், 29 சதங்களை விளாசியுள்ளார். இதன்படி மூன்றில் ஒரு இன்னிங்ஸில் அவர் சதம் அடித்துள்ளார். மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ள டான் பிராட்மேனின் சராசரி ரன்கள் 99.94.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments