`எதுக்கு இந்த டிராமா?' - சித்தார்த்தின் கேள்வியும் அபியின் தயக்கமும்! #VallamaiTharayo

ஆபிஸில் வீக் எண்ட் மீட்டிங்குக்காக பாண்டிச்சேரி போக வேண்டும் என்று எல்லோரிடமும் சொல்கிறார் வீணா. உடனே, `குழந்தைகள் தனியாக இருப்பார்கள், என்னால் வர முடியாது' என்கிறாள் அபி. `இது என்ன சுற்றுலாவா, மீட்டிங். எல்லோரும் வருவது கட்டாயம்' என்கிறார் வீணா. அபியோ `வர முடியாது' என்றே தொடர்கிறாள்.

Vallamai Tharayo

பெண்ணுக்குக் குடும்பப் பொறுப்பு அதிகம்தான். இருந்தாலும் அதை எந்த நிறுவனமும் கருத்தில் கொள்ளாது. ஐடி நிறுவனங்களில் குடும்பப் பொறுப்பைக் காரணம் காட்டி, வர முடியாது என்று சொல்ல முடியாது. குழந்தைகளின் பராமரிப்புக்கு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்துவிட்டுதானே போக வேண்டும்?

வீட்டில் சித்தார்த் இருந்தாலும் அவன் கவனித்துக்கொள்வானா என்கிற சந்தேகத்தில் அபி எக்ஸ்யூஸ் கேட்கிறாள். இந்த விஷயத்தில் கெளதமாலும் உதவ இயலாது.

சித்தார்த்திடம் தயங்கித் தயங்கி பாண்டிச்சேரி போக வேண்டிய விஷயத்தைச் சொல்கிறாள் அபி. தவறா செய்கிறாள் தயக்கம் கொள்வதற்கு? சித்தார்த்துக்கு ஒரு மீட்டிங் என்றால் இப்படித்தான் யோசிப்பானா, என்ன? எதற்கெடுத்தாலும் அபி தயங்கும்போது நமக்கே எரிச்சல் வந்துவிடுகிறது.

Vallamai Tharayo

சித்தார்த் கொஞ்சம் அப்படி இப்படிப் பேசினாலும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதாகச் சொல்கிறான். தேங்க்ஸ் சொல்லிவிட்டுச் செல்லாமல், ``இல்லைங்க, எனக்கு விருப்பம் இல்லை. நீங்க எப்படிப் பார்த்துக்க முடியும்?” என்று வம்பை விலை கொடுத்து வாங்குகிறாள் அபி.

``நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேனே, நிம்மதியா போகணும். இல்ல, குழந்தைகள்தான் முக்கியம்னா வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கணும். எதுக்கு இந்த டிராமா?” என்று சித்தார்த் கேட்கும்போது, அதில் சிறிது உண்மையும் இருக்கிறது என்றே தோன்றுகிறது.

``லோகேஷ், பெனிடா, காயத்ரி எல்லாரும்தான் போறோம். வேன் ஏற்பாடு பண்ணிருக்காங்க” என்று சித்தார்த் கேட்காமலே கூடுதல் தகவலை அபி சொல்லும்போது, கெளதம் வரவில்லையா என்று கேட்கிறான். டீம் லீடர் இல்லாமல் மீட்டிங்கா? இது தேவையா அபி?

Vallamai Tharayo

வேன் முழுவதும் ஆண்கள் பாட்டில்களுடன் அமர, அபி, பெனிடா, காயத்ரி, லோகேஷ் ஆகியோர் கெளதம் காரில் ஏறிக்கொள்கிறார்கள். பின்னால் அமர்ந்திருக்கும் லோகேஷ், பியர் குடிக்க ஆரம்பிக்கிறான். வழியில் ஆபிஸ் ஆள் ஒருவர் காரில் ஏறுவதாகச் சொல்கிறார்.

இனி என்ன நடக்கும்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


from விகடன்

Comments