உடல் எடையை குறைத்ததற்குப் பின், பயங்கர ஆக்டிவாக இருக்கிறார் சிம்பு. 30 நாள்களுக்குள் இயக்குநர் சுசீந்திரனின் ’ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, இப்போது ’மாநாடு’ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதன் பின்னர், ஏற்கெனவே அறிவித்திருக்கும் ‘மஃப்டி’ கன்னடப்படத்தின் ரீமேக்கான ’பத்து தல’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படங்களை எல்லாம் முடித்தப்பின்னர், சிம்பு எந்தப் படத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் அவரை வைத்து படம் இயக்கவேண்டும் என நினைக்கும் இயக்குநர்கள் லிஸ்ட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
’ஈஸ்வரன்’ படத்தில் சுசீந்திரன் வேலை வாங்கிய விதம் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கதை கேட்டிருக்கிறார். இது விவசாயத்தையும், அரசியலைப் பற்றியும் பேசக்கூடிய கதையாக இருக்கும் என்கிறார்கள்.
இதற்கிடையில், சிம்பு நடிக்க இயக்குநர் ராம் ஒரு படத்தை இயக்கத் தயாராகிவருகிறார். இயக்குநர் ராம் சிம்புவுக்கு இரண்டு கதைகள் சொல்லியிருக்கிறாராம். ஒன்று, சமூக பிரச்னை சார்ந்த கதை. இன்னொன்று, பயணத்தை மையப்படுத்திய கதை. பத்திரிகையில் வெளியான ஒரு சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த ட்ராவல் கதையில் ஹீரோவோடு படம் முழுக்க ஹீரோயின் கேரக்டரும் பயணிக்குமாம். அந்த ஹீரோயின் கேரக்டருக்காக நயன்தாராவிடம் ஏற்கெனவே கதையைச் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் இயக்குநர் ராம். தற்போது, இந்தப் பயணக் கதைக்கு சிம்புவும் ஓகே சொல்லிவிட்டால், ‘வல்லவன்’, ‘இது நம்ம ஆளு’ படத்திற்குப் பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகத்தான் இருக்கும்.
from விகடன்
Comments