பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஐம்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
ஒளிபரப்பு தொடங்கிய முதல் வாரம் மட்டும் எவிக்ஷன் இல்லை. மறுவாரத்திலிருந்து எவிக்ஷன் ப்ராசஸ் தொடங்கி ரேகா, சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் வெளியேறினர். இன்னொருபுறம் புதிய போட்டியாளர்களாக ஆங்கர் அர்ச்சனாவும் அவரைத் தொடர்ந்து மிர்ச்சி சுச்சியும் ஷோவுக்குள் வந்தார்கள். இவர்களில் மிர்ச்சி சுச்சி கடந்த வார எவிக்ஷனில் ஷோவிலிருந்து வெளியேறினார்.
இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷனில் ஆரி, பாலா, சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம், சம்யுக்தா ஆகியோர் இருந்தனர். இவர்களில் ஆரி, பாலா ஆகியோருக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக மக்களின் வாக்கு விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக சம்யுக்தா வெளியேற விரும்புவதாகவும் அதனால் அவர்தான் எலிமினேட் ஆவார் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் நேற்று முதல் பரவியது.
இந்நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது. கடைசியாகக் கிடைத்த தகவல்படி நடிகர் ஜித்தன் ரமேஷ் எவிக்ட் ஆகி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ரமேஷ் வெளியேறி கமல்ஹாசனுடன் உரையாடும் எபிசோடு நாளை இரவு ஒளிபரப்பாக உள்ளது.
இன்னொருபுறம் இன்று மாலை பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் புதிய போட்டியாளர் அஸீம். அவரது என்ட்ரியையும் நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
from விகடன்
Comments