தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

 தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி


சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என சென்னை ஹைகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ - மாணவியர் ஆபாச இணைய தளங்களை காணக் கூடும் என அச்சம் தெரிவித்து, ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை கோரி சரண்யா, பரணீஸ்வரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, ஆன் லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் விதிகளை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான ஆன் லைன் வகுப்புக்கள் நடத்தும் நேரமும் அறிவிக்கப்பட்டது.



1-ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது.


Comments